Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கத்தில் மூழ்கிய சூர்யா.. லட்சத்தில் புரண்டு உல்லாசம்! நன்னடத்தை பத்திரம் பற்றி கேட்ட வட்டாட்சியர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்க நகைகள், நிலம், பணத்துக்காக, இளம்பெண்களிடம் நெருங்கி பழகி மோசடி செய்திருக்கிறார் சூர்யா என்ற இளைஞர்.. குறிப்பாக, மேட்ரிமோனி மூலம் பழகி பல பெண்களை சீரழித்துள்ளார்.. சமீபத்தில் இவரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், விசாரணைக்காக வட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தினர்.. அப்போது வட்டாட்சியர் குற்றவாளி சூர்யாவிடம், "பிரமாண பத்திரம் என்றால் என்ன தெரியுமா" என்று கேட்டுள்ளார்.

சென்னை சூளைநகர் பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.. இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார்.

Gold Jewellery Surya

இவர் கடந்த மாதம், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சூர்யா மீது தந்தார்.. ''தமிழ் மேட்ரிமோனி மூலம் சூர்யா என்பவர் தனக்கு அறிமுகமாகி பின்னர் என்னை திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்து உல்லாசம் அனுபவித்தார்.

இதன்பிறகு இருவரும் சேர்ந்து நிலம் வாங்கலாம் என்று கூறி என்னிடம் இருந்து 8 லட்ச ரூபாய் மற்றும் 9 சவரன் நகை, லேப்டாப் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை வாங்கினார். இதன்பிறகு தன்னை திருமணம் செய்வதற்கு மறுத்துவிட்டார். எனவே, சூர்யா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

தங்க நகைகளில் புரண்டு

இந்த புகாரின்படி, இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான், மேட்ரிமோனி மூலம் பல பெண்களை சூர்யா சீரழித்துள்ளார் என்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நர்ஸ் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்களை சூர்யா பலாத்காரம் செய்துள்ளாராம்.. அனைவரையுமே இதே மேட்ரிமோனியலில் வலைவீசி, அவர்களை திருமணம் செய்வதாக சொல்லி நம்ப வைத்துள்ளார்.

அந்த பெண்களின் நம்பிக்கையை பெற்றதுமே, உடலுறவு வைத்து கொள்வாராம்.. இறுதியில், தன்னுடைய செல்போனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, அந்த ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு சென்று விடுவாராம்.. இதுவரை இப்படி 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ஜாலியாக இருந்திருப்பதாக தன்னுடைய வாக்குமூலத்தில் சூர்யா கூறினார்.

ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவருவதாக பெண்களிடம் சொல்லியே அத்தனை பெண்களையும் சூர்யா ஏமாற்றியதும் விசாரணையில் உறுதியானது..

புழல் சிறையில் கல்யாண மன்னன்

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த சூர்யாவை கைது செய்து சென்னைக்கு அழைத்துவந்தனர். அப்போது சூர்யா, சிறுநீர் கழிக்கவேண்டும் என்று சொன்னதால், போலீசார் அவரை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென சூர்யா, போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார்..

அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் அவரது வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். பிறகு அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தந்து, எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, இறுதியாக புழல் சிறையிலும் போலீசார் அடைத்தனர்.

நீதிபதி எச்சரிக்கை

இந்தநிலையில் நேற்றையதினம், புழல் சிறையில் இருந்து சூர்யாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைந்தகரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தினார்கள்..

அப்போது அமைந்தகரை வட்டாட்சியர் சூர்யாவிடம், ''நன்னடத்தை பத்திரம் வழங்கப்படும். அந்த பத்திரத்தின்படி ஒழுங்காக இருக்கவேண்டும். இவற்றை மீறி மீண்டும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

அத்துடன் நன்னடத்தை பத்திரத்தில் சூர்யா கையெழுத்து போட்டதுமே, வட்டாட்சியர் சூர்யாவிடம், "நன்னடத்தை பத்திரம் என்றால் என்ன தெரியுமா?" என்று கேட்டு, அந்த நன்னடத்தை பத்திரத்தை சூர்யாவுக்கு படித்து காண்பித்து, இதன்படி வாழவேண்டும் என்று எச்சரித்தார்..

பிரமாண பத்திரம்

நன்னடத்தை பிரமாண பத்திரம் மூலம் இளம்பெண்களுக்கு நேரடியாகவோ வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ மின்னணு சாதனங்கள் மூலமாகவோ அல்லது மூன்றாம் நபர் மூலமாகவோ தொடர்புகொள்ள முயற்சி செய்யகூடாது..

பாதிக்கப்பட்ட பெண்களின் வீடு மற்றும் வேலை செய்யும் அலுவலகத்துக்கு செல்லகூடாது, இணையதளத்தில் பின்தொடரவோ கூடாது.. இவற்றை மீறினால் 3 ஆண்டு சிறைக்கு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படும்" என்று எச்சரித்தார்.

50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி தங்க நகைகள், பணத்தை பறித்த சூர்யாவின் அப்பா, மத்திய உளவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+