நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது?
சென்னை: வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் நகைக்கடன் வாங்கியவர்களுக்கு இப்போது ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.. கஷ்ட காலத்தில் கையில் இருக்கும் நகையை வைத்து பணம் வாங்குவது என்பது நம்ம ஊரில் மிகச் சாதாரண விஷயம்.. ஆனால் இப்போது அந்த நகைக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நகைக்கடன் தொடர்பாக தற்போது சில கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்தி வருகிறது. அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
நகைக்கடன் தொடர்பான விதிமுறைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் போனால் நீங்கள் ஆசையாய் அடகு வைத்த நகை உங்கள் கையை விட்டுப் போவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.. அதனால் நகைக்கடன் வைத்திருப்பவர்கள் இனி ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்..

நகைக்கடன் ரூல்ஸ்
பொதுவாக நகைக்கடன் வாங்கியவுடன் அந்த பணத்தை வைத்து ஏதோ ஒரு வேலையை முடிப்போம்.. அதன் பிறகு வட்டியை கட்டிவிட்டு அசலை மெதுவாக பார்த்துக் கொள்ளலாம் என்று அசால்ட்டாக இருப்போம்.
ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை.. லோன் வாங்கியவர்கள் உரிய நேரத்தில் வட்டியை செலுத்த தவறினால் அந்த நகைகளை ஏலத்திற்கு விட வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது.
முன்பெல்லாம் நகை ஏலத்திற்கு விடுவதற்கு முன்பு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்படும்.. ஆனால் இப்போது , கடன் காலக்கெடு முடிந்து, தேவையான நோட்டீஸ் காலம் முடிந்த பிறகு வங்கிகள் ஏல நடவடிக்கைகளைத் தொடங்கலாம்.. அதனால் நகையை திரும்ப பெறுவதில் தாமதம் காட்டினால் உங்கள் நகை எப்போதும் போல் உங்கள் லாக்கரில் இருக்காது..
தங்கம் நகை - வட்டி உயர்வு
நகைக்கடனுக்கான வட்டி விகிதங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கொள்கைகளின் அடிப்படையில் மாறுபடுகின்றன.. ஒவ்வொரு வங்கியும் தனித்தனி வட்டி விகிதங்களை நிர்ணயித்து வருகிறது.. அதனால் வட்டி விகிதம் வங்கி மற்றும் வாடிக்கையாளர் நிபந்தனைகளின் அடிப்படையில் மாறக்கூடும்.
லோன் வாங்கும்போது இருந்த வட்டிக்கும் இடையில் மாறும் வட்டிக்கும் வித்தியாசம் இருக்கலாம்.. அதனால் நீங்கள் வாங்கிய பணத்திற்கு அதிகமாக வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்படலாம்.. வட்டியைக் கட்ட முடியாமல் போனால் அது உங்கள் கடன் சுமையை இன்னும் அதிகமாக்கும்.. அதனால் மாதா மாதம் வட்டியைக் கட்டுவதில் எந்த கவனக்குறைவும் காட்டக்கூடாது..
ஏல பயம் - புகார்கள்
நகைகளை ஏலம் விடும் நடைமுறைகள் குறித்து சில வாடிக்கையாளர்கள் குறைகள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.. தங்கத்தின் விலை உயர்ந்தாலும் நீங்கள் வாங்கிய கடனுக்கு நிகரான மதிப்பை மட்டும் எடுத்துக் கொண்டு மீதித் தொகையை வழங்கும் நடைமுறைகளில் சில சிக்கல்கள் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, சில தனியார் நிதி நிறுவனங்கள் நகையை ஏலம் விடும்போது தகவல் பரிமாற்றத்தில் குறைகள் உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதையெல்லாம் கட்டுப்படுத்தவே ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகிறது..
இருந்தாலும் லோன் வாங்கியவர்களுக்கு இது ஒரு பக்கம் அழுத்தத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.. நகையை ஏலத்திற்கு விடக்கூடாது என்றால் லோன் காலாவதியாகும் முன்பே பணத்தைத் தயார் செய்ய வேண்டும்..
நிச்சயமற்ற தங்கம்
தங்கத்தின் விலை திடீரென உயர்வதும் குறைவதும் காரணமாக வங்கிகள் இப்போது நகையின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதம், (பொதுவாக 75% வரை) மட்டுமே கடன் வழங்குகின்றன.. மீதமுள்ள தொகை பாதுகாப்பிற்காக வைக்கப்படுகிறது.
ஒருவேளை தங்கத்தின் விலை நிலைத்திருக்கவோ அல்லது குறையவோ செய்தால் வாடிக்கையாளர்கள் கூடுதல் மார்ஜின் தொகையைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.. அப்படிச் செலுத்தவில்லை என்றால் உங்கள் நகை ஏலப் பட்டியலுக்கு செல்லும் அபாயம் உள்ளது.. அதனால் லோன் எடுக்கும் போதே அதன் முழு விதிமுறைகளையும் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்துப் போடுவது உங்கள் நகைக்குப் பாதுகாப்பாக அமையும்..!!!












Click it and Unblock the Notifications