தங்கம் விலை! செப்டம்பர் மாதம் பொறந்ததுமே வயிற்றில் புளியை கரைத்தது! சென்னையில் ஒரு பவுன் எவ்வளவு?
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ 53,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ 6,670-க்கு விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து கிராம் ரூ 91 க்கும் கிலோ வெள்ளி ரூ 91 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதத்தில் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்குமோ என பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் நேற்று செப்டம்பர் 1 ஆம் தேதி சந்தைக்கு விடுமுறை என்றால் இன்றைய தினம் செப்டம்பர் 2 ஆம் தேதி தங்கத்தின் விலை கூடுமா குறையுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செப்டம்பர் 2 ஆம் தேதி ரூ 200 குறைந்து சவரன் விலை ரூ 53360 க்கு விற்கப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 25 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6670க்கு விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து ஒரு கிராம் ரூ 91-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 91 ஆயிரத்திற்கும் விற்கப்படுகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை எட்டியது. இதனால் நடுத்தர ஏழை மக்களால் ஒரு குண்டுமணி பவுன் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
ஆகஸ்ட் மாதம் முதலே தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை நிலவரத்தை பார்த்தோமேயானால், ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது போல் ஆகஸ்ட் 26ஆம் தேதி கோகுலாஷ்டமியை முன்னிட்டு விடுமுறை என்பதாலும் ஆகஸ்ட் 27ஆம் தேதி எந்த மாற்றமும் இல்லாமல் பழைய விலைக்கே தங்கம் விற்பனையானது.
பின்னர் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (ஆகஸ்ட் 28) சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ 53,720 க்கும், கிராமுக்கு ரூ 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6715க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ரூ 93.50-க்கு விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (ஆகஸ்ட் 31) சவரனுக்கு ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூ 53,560 க்கும், கிராமுக்கு ரூ 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 6695க்கும் விற்பனை செய்யப்பட்டதுது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 1 குறைந்து தற்போது ரூ 92-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்வதேச சந்தைகளுக்கு விடுமுறையாகும். எனவே தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 2 ஆம் தேதி மகிழ்ச்சி தகவலாக தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 200 குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications