சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகம்.. நேற்று பவுனுக்கு ரூ.224 குறைந்தது
சென்னை: சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து இறங்கி வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.224 குறைந்து, ஒரு பவுன் ரூ.28,672க்கு விற்பனை ஆனது.
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் 23 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில் மெதுவாக உயர்ந்து வந்தது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை 3 ஆயிரம் வரை அதிகரித்தது. அதாவது 27 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்தது.

இந்த வரலாறு காணாத விலை உயர்வு பொதுமக்களை நிலைகுலைய வைத்தது. திருமணத்திற்கு தங்கம் வாங்குவோர் வேதனை அடைந்தனர். இந்நிலையில் தங்கம் விலை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இறங்கி வருகிறது.
நேற்றும் தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.3ஆயிரத்து 612க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 896க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை மீண்டும் 28 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 584க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுன் தங்கம் 28 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு 696 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளிவிலையும் கடந்த சில நாள்களாக சரிந்து வருகிறது. நேற்று வெள்ளி விலை கிலோவுக்கு 2 ஆயிரத்து 200 சரிந்து ஒரு கிலோ 48 ஆயிரத்து 700க்கும், ஒரு கிராம் 48 ரூபாய் 70 காசுகளுக்கும் விற்பனை ஆனது,.
-
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
தங்கத்தில் செய்யப்படும் பெரிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு.. செபி அதிரடி! நீங்கள் பாதிக்கப்படுவீர்களா? -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications