வாயை பிளக்க வைக்கும் மாற்றம்.. ரிசர்வ் வங்கி வைத்துள்ள தங்கத்தின் மதிப்பு இப்போது எவ்வளவு தெரியுமா?
சென்னை: தங்கத்தின் விலை உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் 71560க்கு விற்பனையாகிறது. கிட்டதட்டட ஒரு சவரன் செய்கூலி சேதாரம் எல்லாம் சேர்த்து 80 ஆயிரத்தை நெருங்கி விட்டது. தங்கத்தின் மதிப்பு உயர்த்துள்ளதால், ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு ம் ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அளவுக்கு அதிகரித்ததிருக்கிறது.
'
தங்கம் வாங்குவது இனி வரும் நாட்களில் எளிதானதாக இருக்காது.. பொருளாதார நிலையற்றத் தன்மை, உலக நாடுகளிடையே ஏற்பட்டிருக்கும் பதற்றம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த பல்வேறு முடிவுகள், பங்கு சந்தைகளில் ஏற்பட்டு மாற்றங்கள் போன்ற காரணங்களால், பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளார்.

பங்கு சந்தைகளில் முதலீடு செய்த பலரும் தங்கத்தின் முதலீடு செய்ய தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. இந்த காரணமாக தங்க நகைகளை அதிகம் குவித்து வைத்துள்ள நகைக்கடை உரிமையாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள். தங்கம் விலை கடந்த ஓராண்டில் ஒப்பிடும் போது,கிட்டத்தட்ட 20000 என்கிற அளவில் உயர்ந்துள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் 30000 என்கிற அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நகையில், தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தங்கத்தின் மதிப்பு உயர்வு காரணமாக ரிசர்வ் வங்கி கைவசம் உள்ள தங்கத்தின் மதிப்பும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துவிட்டது.. ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்ட தரவுகளின்படி, ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் ரூ.11,986 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதன் மூலம், ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.6,88,496 கோடியாக உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கி வைத்துள்ள தங்கக் கையிருப்பின் மதிப்பு அதிகரிப்பு கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் ஆர்பிஐ கையிருப்பில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்காகி உள்ளதாகவும்,, இதனுடன், மத்திய ரிசர்வ் வங்கி, தங்கக் கையிருப்பை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏனெனில் சர்வதேச அளவில் நிலவும் பல்வேறு அபாயங்கள் காரணமாக, இந்தியா, வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருந்த தங்கக் கையிருப்பை சொந்த நாட்டுக்கு மாற்றும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனா அமெரிக்கா வர்த்தக போர், உலக நாடுகளுக்கு எதிராக டிரம்ப் விதித்த வரி முறை, ரஷ்யா உக்ரைன் போர், பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால், பல்வேறு நாடுகளில் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கம் மட்டுமே பாதுகாப்பான முதலீடு என பலர் நம்புவதால் அதில் முதலீடு செய்கிறார்கள்.. அதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
-
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
605,180,000,000 கோடி அநாமத்தா போச்சு.. ரிசர்வ் வங்கிக்கு போன உங்கள் பணம்! திரும்பப் பெறுவது எப்படி? -
அமெரிக்கா போரில் பிஸி.. சத்தமின்றி சீனா உருவாக்கும் 'தங்கக் கவசம்'.. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம் -
தங்கம் 'டல்'.. 100 ஆண்டுகளில் நடக்காத மிக மோசமான சம்பவம்.. முதலீட்டை எல்லாம் முறியடித்த சரிவு! -
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
கயிறு அவிழப்போகுது.. தங்கத்தின் 'திக் திக்' நிமிடங்கள்.. ஸ்விஸ் வங்கி விடுக்கும் பயங்கர வார்னிங்! -
உலக தங்க மார்க்கெட்டே கதறப்போகுது.. புதின் போட்ட முக்கிய உத்தரவு.. தங்கத்தை அஸ்திரமாக மாற்றிய ரஷ்யா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications