கொரோனா போல் கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை.. சென்னையில் ரூ 39 ஆயிரத்தை நெருங்கியது!
சென்னை: சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ 39 ஆயிரம் நெருங்குகிறது. அதாவது இன்று ரூ.38,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்வதை போல் தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

சென்னையில் நேற்று முன் தினம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ 37,736-க்கு விற்பனையானது. ஆனால் இன்று 544 ரூபாய் உயர்ந்து ரூ 38,280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ 68 உயர்ந்து ரூ 4,785 க்கு விற்பனையாகிறது.
அது போல் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 40,152 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 60100 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 65,700 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 65.70 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரு தினங்களில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 10 வரை அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.38,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.74 உயர்ந்து ரூ.4,847-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.3.50 அதிகரித்து ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து நகைக் கடைக்காரர்கள் கூறுகையில் இந்த ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை எட்டும் என்றனர். இதனால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோர் கலக்கமடைந்துள்ளனர்.
-
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications