தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்.. திடீரென பாதாளத்தில் விற்பனை விலை! பெரும் சரிவுக்கு என்ன காரணம்?
சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று பெரும் சரிவை சந்தித்து இருக்கிறது. சர்வதேச அளவில் பல்வேறு விவகாரங்கள் காரணமாக இன்று ஒரே நாளில் தங்கத்தின் விற்பனை விலை 1,520 ரூபாய் சரிந்து இருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்தியாவில் தங்கத்தின் விற்பனை விலையானது கணிசமாக உயர்ந்தும் குறைந்தும் வந்திருக்கிறது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது.

சர்வதேச அளவில் பாதுகாப்பான முதலீடு என்பதால் தங்கம் வாங்க ஆர்வம் காட்டினர் மக்கள். கடந்த ஏப்ரல் மாதத்தில் 55 ஆயிரம் ரூபாய் வரை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்தது. அதேபோல 18 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் பொதுமக்கள் இல்லத்தரசிகள் கவலை அடைந்தனர்.
சர்வதேச அளவில் போர் உள்ளிட்ட காரணங்களால் பிற வர்த்தகங்களில் ஈடுபடுவதை விட தங்கத்தின் மீதான முதலீடு பாதுகாப்பாக இருக்கும் என முதலீட்டாளர்கள் கருதியதால் தங்கத்தின் விலை ஆனது உயர்ந்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் வரும் காலங்களிலும் தங்கத்தின் விற்பனை விலை ஏற்ற இறக்கத்தோடு இருக்கும் எனவும் ஆபரண தங்கத்தை விட சுத்த தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும் என வியாபாரிகள் கூறியிருந்தனர்.
தொடர்ந்து மே மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து நிலையில் இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை உயர்வை சந்தித்தது. நேற்று முன்தினம் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்த தங்கம் 54,400 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று விலை கிராமுக்கு சுமார் 320 உயர்ந்து 54 ஆயிரத்து 720 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 40 ரூபாயும் சவரனுக்கு 320 ரூபாயும் விலை அதிகரித்து ஒரு சவரன் தங்கம் 54, 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 58,480 ஆகவும் ஒரு கிராம் 7310 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் 100.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 500க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.குறிப்பாக தங்கத்தின் விலை ஒரே நாளில் 1520 ரூபாய்க்கு சரிந்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஆனது ஒரு கிராம் 6,650 ஆகவும், 8 கிராம் 53,200 ரூபாய்க்கும் விற்பனையானது. இது நேற்றைய விலையை விட கிராமுக்கு 190 ரூபாயும் சவரனுக்கு 1,520 ரூபாயும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் போல 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து, 8 கிராமுக்கு 1,656 ரூபாய் வரை சரிந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications