வரலாறு கண்டிராத உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரே நாளில் விண்ணுக்கு எகிறிடுச்சே! அதிர்ந்த மக்கள்!
சென்னை: வரலாற்றிலேயே இல்லாத அளவு சென்னையில் ஆபரண தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 600 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 7 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை தங்கம், அனைத்து தரப்பு மக்களின் முக்கியமான முதலீடாக இருக்கிறது. சர்வதேச சந்தை வர்த்தகம் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதவாக்கில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்தது. அடுத்த ஒரே வாரத்தில் விலை சரிவு நின்று, அதன்பிறகு ஏற்ற இறக்கத்தில் உள்ளது. கடந்த ஜூலை 17 ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ. 6,920ஐ எட்டியதே இதுவரையிலான அதிகபட்சமாக இருந்தது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சனிக்கிழமையான இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 75 ரூபாய் அதிகரித்து ரூ.6,960 என்று விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு ரூ. 600 அதிகரித்து தற்போது ரூ.55,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 17 ஆம் தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.54,920க்கும், 18 ஆம் தேதி சவரன் ரூ.54,800க்கும், 19 ஆம் தேதி சவரன் ரூ.54,600க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,885க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,080 என்றும் விற்பனையானது. இந்நிலையில் இன்று கிராமுக்கு மேலும் ரூபாய் 75 உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 6,960க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ. 600 அதிகரித்து ரூ.55,680-க்கும் விற்பனை ஆகிறது.
தங்கத்தின் இந்த திடீர் விலையேற்றம், தங்க நகை வாங்க எண்ணியவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ. 98க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications