தங்கம் விலை! இன்னும் 80 ரூபாய்தான் இருக்கு! நாளைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கும் போலயே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்துள்ளது. தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 55 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். வெள்ளி விலையும் 100 ரூபாய் வந்துடும் போல!

சென்னையில் செப்டம்பர் 13 ஆம் தேதி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ 6865-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் விலை ரூ 54,920 க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 2 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 97 க்கும் ஒரு கிலோ ரூ 97 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. இரு தினங்களில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 1280 உயர்ந்துள்ளது.

gold rate gold chennai

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை எட்டியது. இதனால் நடுத்தர ஏழை மக்களால் ஒரு குண்டுமணி பவுன் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

ஆகஸ்ட் மாதம் முதலே தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை நிலவரத்தை பார்த்தோமேயானால், ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது போல் ஆகஸ்ட் 26ஆம் தேதி கோகுலாஷ்டமியை முன்னிட்டு விடுமுறை என்பதாலும் ஆகஸ்ட் 27ஆம் தேதி எந்த மாற்றமும் இல்லாமல் பழைய விலைக்கே தங்கம் விற்பனையானது.

பின்னர் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (ஆகஸ்ட் 28) சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ 53,720 க்கும், கிராமுக்கு ரூ 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6715க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ரூ 93.50-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (ஆகஸ்ட் 31) சவரனுக்கு ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூ 53,560 க்கும், கிராமுக்கு ரூ 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 6695க்கும் விற்பனை செய்யப்பட்டதுது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 1 குறைந்து தற்போது ரூ 92-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்வதேச சந்தைகளுக்கு விடுமுறையாகும். எனவே தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செப்டம்பர் 2 ஆம் தேதி ரூ 200 குறைந்து சவரன் விலை ரூ 53360 க்கு விற்கப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 25 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6670க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து ஒரு கிராம் ரூ 91-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 91 ஆயிரத்திற்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் தங்கத்தின் விலை மாற்றமில்லாமல் அதே விலையில் நீடித்தது.

செப்டம்பர் 6ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ 53,760 க்கு விற்பனையானது. அது போல் ஒரு கிராம் ரூ 6,720க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு தங்கத்தின் விலையில் குறைந்த அளவில் உயர்வதும் குறைவதுமாக இருந்தது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை செப்டம்பர் 12 ஆம் தேதி சவரனுக்கு ரூ 960 உயர்ந்தது. ஒரு கிராம் ரூ 6825 க்கும் ஒரு சவரன் ரூ 54,600 க்கும் விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலையும் ரூ 3.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 95 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 95,000க்கும் விற்பனையானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+