அர்ஜெண்டா 5 கிராமாவது வாங்குங்க! ஒரு பவுன் தங்கம் ஒரு லட்சமாகப் போகுது! நிபுணர்கள் கொடுத்த வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு 90 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் விரைவில் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.90,000-ஐ நெருங்கியுள்ளதால், திருமணங்கள் மற்றும் பண்டிகை போன்றவற்றுக்காக தங்க வாங்க தயாராகி வரும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தங்கத்தின் விலை எப்போதும் சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு, ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பாக, சமீபத்தில் அமெரிக்கா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரை வரி விதித்தது.

Gold Price Gold Diwali

தங்கம் விலை உயர்வு

அதோடு, ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகரான அளவில் ரூ.88.75 ஆக சரிந்திருப்பதும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதோடு, உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் போன்ற சர்வதேச அரசியல் பதட்டங்களும் தங்கத்தின் தேவை மற்றும் விலை மீது தாக்கம் ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தைப் பதிவு செய்து வருகிறது. இந்நிலையில், அக்டோபர் 7ஆம் தேதி நிலவரப்படி, 22 காரட் தங்கம், ஒரு கிராம் 11,200 ரூபாய்க்கும், ஒரு பவுன் 88,600 ரூபாய்க்கு விற்பனையானது.

ஒரு சவரன் தங்கம்

இதேபோல், 24 காரட் தங்கம், ஒரு பவுன் 97,744 ஆயிரம் ரூபாய்க்கும், 18 காரட் தங்கம், ஒரு பவுன் 74,200 ரூபாய்க்கும் விற்பனையானது. பொதுவாக தங்கம் விலையில் காலை, மாலை என இரண்டு முறை மாற்றம் ஏற்பட்டாலும் காலையில் தான் அதிகமாக விலை மாற்றம் ஏற்படும். ஆனால் கடந்த சில நாட்களாக மாலையிலும் விலை உயர்வில் திடீர் வேகம் காணப்படுகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் சூழ்நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் விலை மேலும் உயரும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

தீபாவளி தங்கம்

அதோடு, ஐப்பசி மாதத்தில் தொடங்கும் முகூர்த்த நாட்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் காரணமாக தங்கம் விற்பனை அதிகரிக்கும் என்பதும் விலை உயர்வுக்கான முக்கிய காரணமாகும். இதனால் தீபாவளிக்கு முன்பே தங்கம் விலை ரூ.90,000 ஐ கடந்துவிடும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேலும், விரைவில் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.

ரூ.1 லட்சம் தங்கம்

தற்போதைய தங்கத்தின் வளர்ச்சி விகிதத்தை கவனித்தால் தங்கத்தின் விலை மாதத்திற்கு சராசரியாக 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை உயர்ந்து வருவதை கணிக்க முடியும். இதேபோக்கு தொடருமனால் 2026 ஆம் ஆண்டு ஜனவரி - மார்ச் மாதத்திற்குள் 22 கேரட் சவரன் தங்கத்தின் விலை 95 ஆயிரம் முதல் 98 ஆயிரம் ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026ன் நடுப்பகுதி அல்லது அதற்கு முன்பாகவே தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு லட்சம் என்ற எல்லையை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்தால் இன்னும் சில வாரங்களிலேயே தங்கத்தின் விலை ஒரு லட்சம் என்ற இலக்கை எட்டும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+