"புது உச்சத்தை தொட போகும் தங்கம் விலை.." ஆனந்த் சீனிவாசன் பரபர பேச்சு.. எந்தளவுக்கு உயரும்!
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கும் நிலையில், வரும் காலத்தில் அது எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம் விலை கடந்தாண்டு ரூ. 5300க்கு கீழ் வரை கூட சென்றது. அங்கேயே சில காலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அதன் விலை மீண்டும் மளமளவென அதிகரித்துவிட்டது.

இப்போது கடந்த சில காலமாகவே தங்கம் விலை ரூ.5900 என்ற ரேஞ்சில் இருக்கிறது. தங்கம் விலை இப்போது இந்த இடத்தில் இருக்க என்ன காரணம்.. வரும் காலத்தில் அதன் விலை எப்படி இருக்கும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் மேலும் கூறுகையில், ""தங்கம் குறித்து முக்கிய செய்தி ஒன்று வந்துள்ளது. இப்போது ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5900 என்ற ரேஞ்சில் இருக்கிறது. பிரபல ஆங்கில செய்தித்தாளில் தங்கம் விலையை ஆய்வு செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அவர்கள் தங்கம் விலை இப்படியே இருக்கும் என்றும் அமெரிக்க மத்திய வங்கி, தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்று பேச்சு எழுந்தாலே ஒரு அவுன்ஸ் தங்கம் 2400 டாலர் வரை போகும் என்கிறார்கள்.
ரூ. 7200ஐ தொடும்: அதாவது இந்திய மதிப்பில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 7000ஐ தாண்டும். நானும் இதையே தான் கூறி வருகிறேன். இந்தாண்டு இறுதியில் தங்கம் 7000ஐ தாண்டும். இந்தாண்டு இல்லையென்றாலும் அடுத்தாண்டு தொடக்கத்தில் தங்கம் விலை ரூ. 7000 அல்லது ரூ.7200 வரை கூட செல்லும். தங்கத்தை வாங்கச் சரியான வாய்ப்பா எனக் கேட்பவர்களுக்குக் கண்டிப்பாக வாங்கலாம் என்பதே பதில்.
தங்கம் விலை ஏறும் போது தங்கம் நகைக் கடன் நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரிக்கும். ஏனென்றால் தங்கம் விலை அதிகரிக்கும் போதே.. அதே கிராம் தங்கத்திற்கு இந்த நிறுவனங்களால் கூடுதல் தொகையைத் தர முடியும். எனவே, தங்கம் விலை அதிகரிக்கும் போது இதுபோன்ற நிறுவனங்கள் விலையும் அதிகரிக்கும்" என்றார்.
துல்லியமாகச் சொல்ல முடியாது: அதேபோல அவர் மற்றொரு வீடியோவில், "தங்கம் விலை இப்போது நிலையாகவே இருக்கிறது. சிலர் நான் தங்கம் விலை ரூ. 4800 வரை வரும் எனச் சொன்னதாகச் சொல்கிறார்கள். இதற்கு விளக்கம் தர விரும்புகிறேன். நான் மட்டுமின்றி எந்தவொரு நபராலும் தங்கம் விலை எத்தனை ரூபாய் குறையும் என்பதைத் துல்லியமாகச் சொல்லவே முடியாது.
அப்போது இருந்த சூழலில் அமெரிக்க வட்டி விகிதம் ஏறி வந்தது. இதனால் தங்கம் விலையும் குறைந்து வந்தது. கூடுதலாக ஒரு 100 டாலர் குறைந்தால் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4800க்கு வரும் என சொல்லி இருந்தேன். இதற்காக 5200 ரூபாய் வந்த போதும் வாங்காமல் இருந்தால் என்ன அர்த்தம்.
இறங்க இறங்க வாங்கலாம்: எப்போது தங்கத்தைக் குறைந்தபட்ச விலையில் எல்லாம் வாங்க முடியாது. இதை catching the falling knife என்பார்கள். இதையெல்லாம் இறங்க இறங்க வாங்க வேண்டும். பல தடவை நான் சொல்லிவிட்டேன். இப்போதும் சொல்கிறேன் தங்கம் வாங்க இதுவே சிறந்த நேரம். தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 2500 போவது நிச்சயம் (அதாவது இந்திய மதிப்பில் ஒரு கிராம் 7325). எனவே தாராளமாகத் தங்கத்தை வாங்கலாம்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications