Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொட்டு தங்கம் கூட இனி வாங்க முடியாது? சர்ருனு சரியுது.. விர்ருனு ஏறுது! 2 வாரத்தில் ஏற்பட்ட மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரத்தில் சென்னையில் சவரனுக்கு 2680 ரூபாய் சரிவடைந்த நிலையில் நடுத்தர மக்களும் நகை வாங்க நினைத்தவர்களும் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் ஐந்து நாட்கள் தொடர்ந்து சரிவுக்கு பிறகு இந்த வாரம் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. மூன்று நாட்களில் மட்டும் 4160 ரூபாய் வரை தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. 24 கேரட் சொக்கதங்கத்தின் விலை 76 ஆயிரத்து 300ஐ கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் பொருளாதார பிரச்சனைகள் அல்லது போர் உள்ளிட்ட அரசியல் நிலைகுலைவுகள் ஏற்படும் போது பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு ஏற்றதாக தங்கம் இருக்கிறது. தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதும் தங்கத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 15 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற பிறகு சர்வதேச சந்தையில் 15வது முறையாக தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது.

Gold price US Donald Trump

கடந்தாண்டு 2800 டாலரில் இருந்த தங்கத்தின் விலை தற்போது 3000 டாலரை கடந்திருக்கிறது. கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் அதாவது 28.34 கிராம் தங்கத்தின் விலை 3005 டாலராக இருந்த நிலையில் தற்போது 3005.09 டாலராக புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் 8 கிராம் என்ற சவரன் மதிப்பில் வாங்கப்படுகிறது. அதன்படி இந்தியாவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஏறக்குறைய 69,000 ரூபாயாக இருக்கிறது.

தங்கத்தின் விலை உயர்வு ஏற்கனவே எதிர்பார்த்தது தான். ஆனால் 3000 டாலர் வரை தங்கத்தின் விலை உயரும் என நாங்கள் எதிர்பார்த்த நிலையில் அதன் எல்லையை கடந்து விட்டது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இந்தியாவில் குறிப்பாக சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. பிற நாடுகளில் தங்கம் முதலீடாக பார்க்கப்படும் நிலையில் இந்தியா போன்ற நாடுகளில் தங்கம் பாதுகாப்பாகவும், எதிர்கால சேமிப்பாகவும், கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது.

பொட்டு தங்கமாவது வேண்டும் என நினைக்கும் பெண்கள் இன்று வரை இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தான் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருக்கிறது. கடந்த இரண்டு வாரத்தில் தங்கம் விலை மாற்றம் எப்படி இருந்தது என்பது குறித்து சற்று பார்க்கலாம்..

கடந்த வாரத்தில் சென்னையில் தங்கத்தின் விலை தொடர் சரிவை சந்தித்தது. அப்போது மட்டும் சுமார் 2,650 க்கும் மேல் தங்கத்தின் விலை குறைந்தது. இதனால் தங்கம் வாங்க நினைத்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஐந்து நாட்கள் தொடர் சரிவுக்கு பிறகு தங்கத்தின் விலை ஆனது மீண்டும் உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று முன் தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 8,560க்கும், ஒரு சவரன் 68,480 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று 1085 ரூபாய் கிராமுக்கு அதிகரித்து, ஒரு சவரனுக்கு 1480 ரூபாய் உயர்ந்தது.

இதனால் தற்போதைய சூழலில் ஒரு கிராம் தங்கம் 22 கேரட் .8,745-க்​கும், ஒரு பவுன் ரூ.69,960-க்​கும் விற்பனையானது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு 4,160 ரூபாய் தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 24 கேரட் சொக்கத் தங்கத்தின் விளையும் தற்போது கிராமுக்கு 9540 ஆகவும் ஒரு சவரனுக்கு 76 ஆயிரத்து 360 ஆகவும் இருக்கிறது. வெள்ளி விலை கூட கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 108க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த வரிவிதிப்பு நடவடிக்கைதான் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருப்பதற்கு காரணம் எனவும், வரும் நாட்களில் மேலும் விலை சரிந்து புதிய அச்சத்தை தொடும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+