தங்கம் விலை.. இதுவரைக்கும் டிரெய்லர்தானாம்! தீபாவளிக்கு பிறகுதான்.. நகை வியாபாரிகள் சொன்ன தகவல்
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்வதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், தங்கம் விலை ஓராண்டில் ஒரு லட்சம் வரை வரை உயர வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை உயர்வின் தொடக்கமே இப்போதுதான் என்று தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்படியே விலை ஏறிக்கொண்டே போனால், இனி கனவில்தான் தங்கத்தை நினைத்துக் பார்க்க முடியுமோ என எண்ணும் அளவுக்கு தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை கடந்ததது. அதற்கு அடுத்த ஒரு மாதத்தில், அதாவது, கடந்த 16 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்தையும் தொட்டது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்து கடந்த 19 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்தையும் தாண்டி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுப் பிடித்தது. நேற்று கூட தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. நேற்று ஒரு பவுனுக்கு ரூ.250 உயர்ந்து ஒரு பவுன் 59 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்வதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், தங்கம் விலை ஓராண்டில் ஒரு லட்சம் வரை வரை உயர வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை உயர்வின் தொடக்கமே இப்போதுதான் என்று தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக நகை வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், "தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும்.
நவம்பர் இரண்டாவது வாரத்தில் புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை செல்லும். உலக நாடுகளின் பொருளாதாரம், சர்வதேச அளவில் போர் சூழல் நிலவுவதால் தங்கத்தின் மீதான முதலீடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. காரணம் என்னவென்றால், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தங்கத்தின் மீது முதலீடு செய்துள்ள சர்வதேச முதலீட்டாளர்களுக்கு 41 சதவீதம் லாபம் ஈட்டி தந்துள்ளது. வெள்ளியின் மீது முதலீடு செய்தவர்களுக்கு 54 சதவிகிதம் லாபம் கிடைத்துள்ளது.
அதனால், சர்வதேச முதலீட்டாலாளர்களுக்கு தங்கத்தின் மீதான முதலீடு பெரிய விஷயமாக இருக்கும். அதன் மீது இன்னும் அதிக முதலீடு செய்வார்கள். இதனால், தங்கம் விலை தொடர்ந்து மேல் நோக்கிதான் சென்று கொண்டிருக்கும். தீபாவளிக்கு பிறகு விலையில் சின்ன மாற்றம் இருக்கும். அதவது விலை கிராமுக்கு ரூ.100 அல்லது 150 குறையலாம். ஆனால் அடுத்த 6 மாதங்களிலெயே கிராமிற்கு ஆயிரம் ரூபாய் உயருவதற்கான வாய்ப்பு உள்ளது.
இஸ்ரெல் - ஈரான் போர், இஸ்ரேல் - லெபனான் போர் காரணமாகவும் நிலவும் பதற்றம் மட்டும் இன்றி தைவான் மீது போர் தொடுக்க சீனா ஆயத்தமாகி வருவது, ரஷ்யா- உக்ரைன் போர் நீடித்து வருவது உள்ளிட்ட போர் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதாக வியாரிகள் கூறுகிறார்கள்.
இதனால், வரும் காலங்களிலும் தங்கம் வெள்ளி, விலை உயர்ந்து கொண்டுதான் போகும் எனவும் இரண்டு ஆண்டுகளில் சவரன் ஒரு லட்சம் வர ரூபாய் வரை வரும் வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் கூறினர். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் அடுத்த வாரம் புதிய உச்சத்தை எட்டும் என வியாபாரிகள் கணிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications