"ஒரு கிராம் ரூ.7500.." தங்கம் விலை அடுத்தாண்டு இப்படிதான் இருக்கும்.. போட்டு உடைத்த ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், இப்போது தங்கம் வாங்கலாமா.. வரும் காலத்தில் அதன் விலை எப்படி இருக்கும்... ரேட் குறையுமா.. என்பது போன்ற கேள்விகளுக்குப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் பதிலளித்துள்ளார்.

தங்கம் என்பது எப்போதும் ஆபத்தான காலத்தில் கை கொடுக்கக் கூடியது. அவசரக் காலம் என்றால் வேறு எந்த சொத்து இருந்தாலும் அதைப் பணமாக மாற்றுவது கடினம். வீடு, பங்குகள் என அனைத்திற்கும் இதை நிலை.

Gold price will see a steep rise after 12 to 18 months says Anand Srinivasan

ஆனால், தங்கம் அப்படி இல்லை. எப்போது வேண்டுமானாலும் எளிதாக அதைப் பணமாக மாற்றலாம். கடினமான காலங்களில் தங்கத்தை வைத்தோ அல்லது விற்றோ உங்களால் அதை ரொக்கமாக மாற்ற முடியும்.

தங்கம்: இந்தியா என்று இல்லை.. நீங்கள் வெளிநாடுகளில் கூட தங்கத்தை எளிதாக ரொக்கமாக மாற்றலாம்.. நீங்கள் எங்குச் சென்று தங்கத்தைக் கொடுத்தாலும், அது எந்தளவுக்குத் தூய்மையானது என்பதை மட்டும் பரிசோதித்து விட்டு அதற்கான பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். இதன் மூலம் எங்குச் சென்று மாட்டிக் கொண்டாலும் தங்கம் இருந்தால் ஒரு வாழ்க்கையைத் தொடங்க முடியும்.

"தலைவலி.!" கிரெடிட் கார்டு அவுட் ஸ்டாண்டிங் இருக்கா.. அதில் இருந்து தப்பிக்க 3 ஈஸியான வழிகள் இருக்கு

பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் கூட இதன் காரணமாகவே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தொடர்ந்து கூறி வருகிறார். ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் குறைந்தது 400 கிராம் தங்கம் இருக்க வேண்டும் என்பதே அவரது கருத்து.

ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கியுள்ளார். அதில் அவர், "இந்தாண்டு தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் நல்ல லாபத்தைச் சம்பாதித்து இருப்பீர்கள். தங்கம் விலை வரும் காலத்தில் அடுத்து எப்படி இருக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அடுத்த 12 முதல் 18 மாதங்களில் தங்கம் விலை நிச்சயம் உயரும். குறைந்தது ரூபாய் 7000 முதல் 7500 வரை தங்கம் விலை செல்லும்.

இதனால் உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ. அப்போதெல்லாம் தங்கத்தைத் தொடர்ந்து கன்சிடர் செய்யலாம்,. மார்கெட் இடையில் இறக்கும். அப்போது தங்கத்தை வாங்கலாம் என விட்டு விட வேண்டாம். தொடர்ந்து தங்கத்தை கன்சிடர் செய்யலாம்" என்று கூறியுள்ளார்.

ஏன் அப்படிச் சொல்கிறார்: தங்கம் விலை இடையில் சற்று குறையலாம் என்று அவரே கூறுகிறார். அதன் பிறகும் ஏன் இப்போதில் இருந்தே தொடர்ந்து வாங்கச் சொல்கிறார் என்று அவர் கூறுகிறார் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அதற்கு சில காரணங்கள் இருக்கவே செய்கிறது. தங்கம் விலை இதுதான் குறைவு என்று யாராலும் துல்லியமாகக் கணிக்கவே முடியாது. ஏனென்றால் தங்கம் விலை தினசரி தொடர்ச்சியாக மாறிக் கொண்டே இருக்கும்.

எனவே, நீங்கள் குறைந்தபட்ச விலையில் வாங்கலாம் எனக் காத்திருந்தால், உங்களால் எது குறைந்தபட்ச விலை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. பிறகு தங்கத்தை வாங்காமலேயே போகும் அபாயம் இருக்கிறது. மேலும், தங்கம் என்பது நீண்ட கால நோக்கில் கண்டிப்பாக அதிகரிக்கக் கூடியது. சில வார இடைவெளியில் தங்கத்தில் பெரியளவில் ஏற்ற இறக்கம் இருக்காது. எனவே, அதற்காகவும் காத்திருக்கத் தேவையில்லை. இதன் காரணமாகவே அவர் இப்போது முதலே தொடர்ந்து தங்கம் வாங்கச் சொல்கிறார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+