இன்னும் இருக்கு.. இப்பவே புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. தீபாவளி வேற..எகிறி அடிக்குது கோல்ட் ரேட்
சென்னை: தங்கம் விலை கடந்த 35 நாட்களில் மட்டும் பவுனுக்கு 3,520 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், ராக்கெட் வேகத்தில் மீண்டும் விலை ஏறத்தொடங்கியுள்ளது. இன்று தீபாவளி என்பதால், தங்கம் வாங்க நிறைய பேர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, இன்று(அக்.,24) சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ. 58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தங்கம் விலை: கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது... அதிலும் நம்முடைய தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் உயர்ந்து காணப்படுகிறது..
எனினும், தங்கம் விலை இனி மேலும் உயரும் என்றே வல்லுநர்கள் சொல்லி வருகிறார்கள்.. சர்வதேச பொருளாதார நிலையற்ற தன்மை, பணவீக்கம், புவிசார் பதட்டங்கள் ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.. அதுமட்டுமல்ல, தங்கம் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றும் உறுதியாக கூறுகிறார்கள்.
வட்டி விகிதம்: "வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் போது, கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். அதேநேரம் வட்டி விகிதம் குறையும் போது, லாபம் பெரிதாக வராது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள் இதுவே முக்கியமான காரணமாகும்" என்றும் கணித்து சொல்கிறார்கள்.
அதற்கேற்றவாறு, தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினமும் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திடீர் விலை: அதன்படி நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 விலை உயர்ந்துவிட்டதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440க்கு விற்பனை செய்யப்பட்டது.. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.520 உயர்ந்து ரூ.59,520க்கு விற்பனையானது.. அதுபோலவே வெள்ளியின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.109-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த வருடத்தின் முடிவில் ஒரு கிராம் ரூ.8000-ஐ தொட்டுவிடும் என்றும் தங்கம் விலை ரூ.60,000ஐ கடக்கும் என்றும் நிபுணர்கள் கணித்து வரும்நிலையில்தான், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து, 7,440 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து, 59,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 109 ரூபாய்க்கு விற்பனையானது.
தங்கம், வெள்ளி: இன்று தீபாவளி பண்டிகை என்பதாலும், புதிதாக தங்கம் வாங்கி, கடவுள் படங்கள் முன்பு வைத்து பூஜை செய்து அணிந்தால், செல்வம் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளதாலும், தங்கத்தின் விலை மேலும் இன்று அதிகரிக்கும் என்ற கலக்கம் மக்களை சூழ்ந்துள்ளது.. காரணம், தங்கம் விலை சவரன் 59,000 ரூபாய் என்று புதிய உச்சத்தை நேற்றைய தினம் பெற்றிருந்தது.
வட மாநிலத்தவர் பண்டிகையான தந்தேரஸ் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இதற்காக வெள்ளிப் பொருட்கள் வாங்குவது வழக்கமாகும்.. இதன் காரணமாக, வெள்ளி விற்பனையும் கடந்த இரு நாட்களாக களைகட்டியது.
கோவை விலை: தீபாவளி திருநாளான இன்று கோயம்புத்தூர் - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 7,441 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 8,117 (1 கிராம்) ஆகவும் உள்ளது.
-
Gold Rate: இந்த சன்டே மட்டும் குறுக்கே வராம இருந்திருந்தா..! தங்கம் விலை இன்னும் குறைஞ்சிருக்குமே! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
தங்கம் விலை காலி.. 1983க்குப் பிறகு நடக்காத மிகப்பெரிய சம்பவம்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்! -
நகை கடன் தள்ளுபடி ரெடி? முக்கோணம் எடுக்கும் கோல்டு லோன் வாக்குறுதி.. ஆடுபுலி ஆட்டம் ஆரம்பம்! -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications