சென்னையில் தங்கம் விலையில செம்ம சரிவு.. மூன்றே நாளில் அதிரடி மாற்றம்.. நகை வாங்குவோர் உற்சாகம்
சென்னை: அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை மூன்று நாளில் மட்டும் 1480 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.37600.க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த 3 மாதமாக ஏறுவதும், பின்னர் இறங்குவதுமாக காணப்படுகிறது. தொடர்ச்சியாக 7 நாட்களில் மட்டும் சவரன் 1384 அளவுக்கு அதிகரித்தது. இதனால் சவரன் 39 ஆயிரத்தை தாண்டியது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை 1048 ரூபாய் சரிந்துள்ளது. தங்கம் விலை ரூ.38032.க்கு விற்பனையாகிறது.

டிசம்பர் 30 நிலவரம்
ஒரு சவரன் தங்கம் விலை கடந்த டிசம்பர் 30ம் தேதி 37696.க்கும், டிசம்பர் 31ம் தேதி 37808க்கும், ஜனவரி 1ம் தேதி 37880.க்கும், ஜனவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் 37984க்கும் விற்பனையானது. இப்படி படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை ஜனவரி 3ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு 536 ரூபாய் உயர்ந்து ரூ.38520க்கு விற்பனையானது.

கிடுகிடு உயர்வு
அதற்கு அடுத்த நாளான ஜனவரி 4ம் தேதி இன்னும் உச்சபட்சமாக 38848க்கும், ஜனவரி 5ம் தேதி 39080க்கும் விற்பனையானது. அதாவது ஒரு வாரத்தில் 1384 ரூபாய் அளவுக்கு ஒரு சவரன் உயர்ந்தது. 37696 ரூபாயில் இருந்து ரூ.39080க்கு உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் விலை 4712 ரூபாயில் இருந்து 4754 ரூபாய்க்கு உயர்ந்தது.

கிராமுக்கு 80 குறைவு
இதனிடையே நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) காலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 80 குறைந்து ஒரு கிராம் ரூ.4,805க்கும், சவரனுக்கு 640 குறைந்து ஒரு சவரன் ரூ.38,440க்கும் சென்னையில் விற்கப்பட்டது.

நகை வாங்குவோர் உற்சாகம்
அதே போல நேற்று (வெள்ளிக்கிழமை), தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 51 குறைந்து ஒரு கிராம் ரூ.4,754க்கும், சவரனுக்கு 408 குறைந்து ஒரு சவரன் 38,032க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 432 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் தங்கம் விலை ஒரு சவரன் 37600க்கு சென்னையில் விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1480 குறைந்துள்ளது. தங்கம் விலை திடீரெ சரிந்ததது நகை வாங்குவோரை உற்சாகப்படுத்தி உள்ளது.

தங்கம் வியாபாரிகள்
சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்கும் வரை தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் தான் இருக்கும். எப்போது விலை ஏறும், எப்போது குறையும் என்பதை கணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications