தங்கம் விலையில் வரலாறு காணாத மாற்றம்.. நகை வாங்குவோர் உற்சாகம்.. நகைக்கடைகளில் குவியும் மக்கள்!
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை அண்மைக்காலமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த நான்கு நாளில் மட்டும் 1800 ரூபாய் சரிந்துள்ளது. தங்கம் விலை இன்று மட்டும் சவரனுக்கு 336 ரூபாய் சரிந்துள்ளது
இன்று காலை ஒரு சவரன் தங்கம் 35528 ரூபாய்க்கு சென்னையில் விற்பனையாகியது. மேலும் சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் 4441 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கத்திற்கு போடப்பட்ட இறக்குமதி வரிகுறைந்த காரணத்தால் தங்கம் விலை குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் தங்கம் விலை குறைய சர்வதேச காரணிகளும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

எவ்வளவு சரிவு
சென்னையில் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.36 குறைந்து ஒரு கிராம் ரூ.4,529க்கும், சவரனுக்கு ரூ.288 குறைந்து ஒரு சவரன் ரூ.36,232க்கும் விற்கப்பட்டது. 3வது நாளாக நேற்று காலை தங்கம் விலை சரிவை சந்தித்தது.கிராமுக்கு ரூ.32 குறைந்து ஒரு கிராம் ரூ4,497க்கும், சவரனுக்கு ரூ.256 குறைந்து ஒரு சவரன் ரூ.35,976க்கும் விற்பனையானது. நேற்று மாலையில் தங்கம் விலை மேலும் சரிந்தது. அதாவது நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 46 குறைந்து ஒரு கிராம் 4,483க்கும், சவரனுக்கு 368 குறைந்து ஒரு சவரன் 35,864க்கும் விற்கப்பட்டது.

நகை வாங்குவோர் உற்சாகம்
நேற்றுடன் சேர்த்து தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1,136 அளவுக்கு குறைந்து இருந்தது. இதனால் இன்றும் தங்கம் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. எதிர்பார்த்தபடியே நகை விலை குறைந்து நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விற்பனை அதிகரிப்பு
தங்கம் விலை இன்று மேலும் 336 ரூபாய் குறைந்து, 22 கேரட் ஆபரண தங்கம் தற்போது ஒரு சவரன் . 35528 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 4441 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை நான்கு நாளில் மட்டும் 1800 ரூபாய்க்கு மேல் குறைந்தது மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால் நகைக்கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது.

குறைந்தது வெள்ளி விலை
தங்கம் விலையை போல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி 72200 ரூபாயில் இருந்து 72000 ஆக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி சென்னையில் 72 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications