தங்கம் விலை அதிரடியாக உயர்வு.. முடிவுக்கு வந்த இரண்டு நாள் மேஜிக் .. ஆனாலும் ஒரு ஹேப்பி நியூஸ்
சென்னை: தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக இறங்குமுகத்தில் இருந்து வந்தது... வெறும் 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,120 குறைந்து, கடந்த 4 மாதங்களுக்கு பிறகு ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் வந்திருந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு, ஒரு பவுன் தங்கம் விலை எவ்வளவு என்பதை பார்ப்போம்.
கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் தொடங்கி தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணப்பட்டது. தங்கம் விலை விரைவில் 60000த்தை தொடும் என்ற அச்சம் பல நடுத்தர குடும்பங்களில் ஏற்பட்டது. ஏனெனில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை கடந்து யாரும் எதிர்பாராத வகையில் விலை இருந்து வந்தது.

தங்கம் விலை உயர்வுக்கு சரியாக கடந்த ஜூலை 23ம் தேதி பட்ஜெட்டில் மத்திய அரசு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைப்பதாக அன்று அறிவித்தது. இதன் காரணமாக அன்றைய தினமே தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது. அதன்பின்னர் தொடர்ந்தும் விலை சரிந்து கொண்டே வந்தது. ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தை கடந்த தங்கம், விலை யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சரியத் தொடங்கியது அந்த வகையில் கடந்த ஜூலை) 30-ந்தேதி வரை குறைந்து கொண்டே வந்த தங்கம் விலை, அதன் பின்னர் சற்று உயர்ந்தது.
ஆனால் கடந்த 2 நாட்களாக மீண்டும் இறங்குமுகத்தை சந்தித்து. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 400-க்கும், ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்து 200-க்கும் சென்னையில் தங்கம் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 330-க்கும், ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்து 640-க்கும் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,120 குறைந்தது. சரியாக கடந்த ஜூலை 23ம் தேதி இறக்குமதி வரி குறைப்பு அறிவிப்பு வெளியானதில் நேற்று வரையில் ரூ.3,960 அளவுக்கு தங்கம் விலை குறைந்து இருந்தது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் இருந்தது. அதன் பின்னர் தான் விலை கடுமையாக அதிகரித்தது. இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு, ஒரு பவுன் தங்கம் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் நேற்று வந்தது.இதனால் தங்கம் விலை ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் சரியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
தங்கம் விலை உயர்வு: இந்நிலையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாளைக்கு பின்னர் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.6350க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.50,800 க்கு சென்னையில் இன்று விற்பனையாகிறது
வெள்ளி விலை குறைவு: வெள்ளி விலையை பொறுத்தவரையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் குறைந்து காணப்பட்டது. நேற்று அதன் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.87-க்கும், ஒரு கிலோ ரூ.87 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வந்தது. ஆனால் வெள்ளி விலை இன்று(ஆகஸ்ட் 8) ஒரு கிராமுக்கு 50 பைசா சரிந்து ஒரு கிராம் ரூ.86.50-க்கும், ஒரு கிலோ ரூ.86 ஆயிரத்து 500க்கு விற்பனையாகி வந்தது.
-
Gold Price: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. 3-வது நாளாக குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications