சட்டென உயர்ந்த தங்கம் விலை! இனி ஏறுமுகம் தான் போலயே.. ரெடி ஆகுங்க மக்களே! இன்றைய விலை நிலவரம்!
சென்னை: கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று திடீரென அதிகரித்து இருக்கிறது. மேலும் வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் என கூறப்படும் நிலையில், இன்றைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்..
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் நாள்தோறும் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில் அதற்கு முன்னதாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

கடந்த ஜூலை மாதத்தில் மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் சுங்கவரி குறைக்கப்பட்டது. அப்போது லேசாக தங்கத்தின் விலை சரிந்த நிலையில், அதற்குப் பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. சில நாட்கள் உயர்வது பின்னர் சரிவதுமாக இருக்கிறது. விலை சற்று குறைந்தாலும், ஒரே அடியாக விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்த நிலையில் தற்போது திடீரென உயர்ந்திருக்கிறது. நவம்பர் 5ஆம் தேதியான நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 குறைந்து 58,840க்கும், ஒரு கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 7035 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் வர்த்தகத்தின் 3ஆம் நாளும், நவம்பர் 6ஆம் தேதியான இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. தற்போதைய நிலவரப் படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரன் 58,920 ரூபாய்க்கும் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 7365 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல 18 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு சவரன் 48,480 க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து 6060 க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 105 ரூபாய்க்கும் ஒரு கிலோ 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியான பிறகு தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை 60 ஆயிரம் என்ற உச்சத்தை எட்டும் என்றும் கூறுகின்றனர் வியாபாரிகள்.












Click it and Unblock the Notifications