Gold Rate Today: தங்கம் விலை கிடுகிடு! இன்று சவரனுக்கு ரூ.480 உயர்வு.. 60,000-ஐ நெருங்கும் தங்கம்!
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 480 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.7,450க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.59,600-ஐ எட்டியுள்ளது. இதனால், அடுத்த ஓரிரு நாட்களில் தங்கம் விலை 60 ஆயிரத்தைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின்படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அவ்வப்போது சற்று குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து, கணிக்க முடியாத அளவில் உச்சம் தொட்டு வருகிறது தங்கம் விலை. அண்மையில், பொங்கல் நாளன்று சற்று விலை குறைந்தது தங்கம். அதன்பிறகு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

காணும் பொங்கல் தினமான நேற்று (ஜனவரி 16ஆம் தேதி) சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,390க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.59,120க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜனவரி 17ஆம் தேதி) சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7450க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,600க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் ரூபாய் 1 உயர்ந்து, ரூ.104க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000க்கும், விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,140க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.49,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம் (கடந்த 10 நாட்களில் தங்கம் விலை)
ஜனவரி 7 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,720
ஜனவரி 8 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,800
ஜனவரி 9 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,080
ஜனவரி 10 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,280
ஜனவரி 11 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,520
ஜனவரி 12 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,520
ஜனவரி 13- ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,720
ஜனவரி 14 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,640
ஜனவரி 15 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,720
ஜனவரி 16 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,120
ஜனவரி 17 (இன்று) - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 59,600












Click it and Unblock the Notifications