Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை! வாரத்தின் முதல் நாளே இன்ப அதிர்ச்சி.. நகை பிரியர்கள் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய கிழக்கில் கடந்த இரு நாட்களாகப் போர் சூழலில் ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச தங்க மார்கெட்டில் அது நேரடியாக எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், இன்றும் அது தொடரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.. இருப்பினும், இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம் விலை சரிந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் கூட இதுவரை தொடர்ந்து உயர்ந்ததே வருகிறது. மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமே இதற்குப் பிரதான காரணமாக இருக்கிறது. இதன் காரணமாகவே தங்கம் விலை எகிறி வருகிறது.

Gold Rate Today

மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கில் ஒருவித போர் பதற்றம் உருவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே ஈரானைச் சுற்றிலும் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களைக் குவித்து வந்தது. இது இப்போது முழு வீச்சில் போராக வெடித்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலை ஆரம்பித்தது. இதனால் அப்போதே தங்கம் விலை உயர ஆரம்பித்துவிட்டது.

கமேனி படுகொலை

சனிக்கிழமை காலை அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். மேலும், ஈரானின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். கமேனி உயிரிழப்பை ஈரானும் உறுதி செய்துள்ள நிலையில், அவர்களும் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இதர நாடுகளில் இருக்கும் அமெரிக்க முகாம்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடந்து வருகிறது. இதனால் நிலைமை கையைவிட்டுச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்கவே போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதுவே தங்கம் விலையிலும் நேரடியாக எதிரொலிக்கிறது. எப்போதுமே ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கம் விலையில் ஏற்றம் இருக்கவே இருக்காது. ஆனால், இப்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. கிட்டத்தட்ட புதிய பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்து நிலவும் சூழலில், அது தங்கம் விலையிலும் நேரடியாக எதிரொலிக்கிறது.

தங்க மார்கெட்

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 உயர்ந்து, ரூ.1,26,200க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ரூ.15,775க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.325க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய விலை நிலவரம்

சர்வதேச சூழல்களால் இன்றைய தினம் தங்கம் விலை உயரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவில் நேற்றைய தினமே தங்கம் விலை ரொம்ப உயர்ந்துவிட்டது. சர்வதேச சந்தையில் அந்தளவுக்கு தங்கம் விலை உயராதா நிலையில், இன்று இந்தியாவில் தங்கம் விலை சரிந்தது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.115 குறைந்து, ரூ.15,660 விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1,25,280 விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.315க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம்

2.03.2026 - ஒரு சவரன் 1,25,280 (இன்று)

1.03.2026 - ஒரு சவரன் 1,26,200 (நேற்று)

28.02.2026 - ஒரு சவரன் 1,24,400 (பிற்பகல்)

28.02.2026 - ஒரு சவரன் 1,21,600 (காலை)

27.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200

26.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,360

25.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,440

24.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,120

23.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,880

22.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440

21.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440

20.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+