ஐந்தே நாள் தான்.. சென்னையில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்.. நகை வாங்குவோர் உற்சாகம்!
சென்னை: சென்னையில் தங்கம் விலை 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,272 அளவுக்கு விலை குறைந்துள்ளது. விலை குறைவால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நேற்று நாளில் மட்டும் சவரனுக்கு ரூ192 குறைந்த காரணத்தால் ஒரு சவரன் ரூ.36712 ஆக குறைந்துள்ளது.. முன்னதாக தங்கம் விலை 24ம் தேதி 37120க்கு விற்கப்பட்ட நிலையில் 25ம் தேதி அது 36904 ரூபாய் ஆக குறைந்தது- 26ம் தேதி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது. தங்கத்தின் விலையில் 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,272 அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதால் நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தங்கம் விலை ஏற்றம் ஏன்
தங்கம் விலை கொரோனா ஊரடங்கு காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது. பொதுவாக அமெரிக்க பொருளதாராம், கச்சா எண்ணெய் மதிப்பு, காரணமாக தங்கம் விலை உயரும் குறையும். பொருளதார மந்த நிலையின் போது மக்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். அப்போது தங்கத்தின் விலை விறுவிறு அதிகரிக்கும். ஆனால் அமெரிக்க பொருளாதாரமும், கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்க தொடங்கினால் தங்கத்தில் செய்த முதலீடை எடுத்து அதில் போடுவார்கள் என்பதால் அப்போது சரசரவென குறையவும் செய்யும். ஆனால் கொரோனால ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்தது

ஆகஸ்டில் உச்சம்
தங்கம் விலை இந்திய வரலாற்றில் இல்லாத அளவாக ஆகஸ்ட் 7ம் தேதி அன்று ஒரு சவரன் ரூ.43,328க்கு சென்னையில் விற்பனையானது.. அதன் பிறகு தங்கம் விலை சரசரவென சரிந்தது. அடுத்த மூன்று மாதங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது 6 ஆயிரம் வரை குறைந்துளளது.

என்ன மாற்றம்
கடந்த 23ம் தேதி ஒரு சவரன் ரூ. 37,984, 24ம் தேதி ரூ.37,120, 25ம் தேதி 36,912க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 1 குறைந்து ஒரு கிராம் 4,613க்கும், சவரனுக்கு 8 குறைந்து ஒரு சவரன் 36,904க்கும் விற்பனையானது. இந்த சூழ்நிலையில் நேற்று காலை 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது. காலையில் கிராமுக்கு 37 குறைந்து ஒரு கிராம் 4,576க்கும், சவரனுக்கு 296 குறைந்து ஒரு சவரன் 36,608க்கும் விற்கப்பட்டது. மாலையில் விலை சற்று அதிகரித்தது.

பெரும் சரிவு
நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 24 குறைந்து ஒரு கிராம் 4,589க்கும், சவரனுக்கு 192 குறைந்து ஒரு சவரன் 36,712க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,272 குறைந்திருக்கிறது. தே நேரத்தில் 4 மாதத்தில் மட்டும் சவரனுக்கு சுமார் 6,616 அளவுக்கு குறைந்திருக்கிறது.. இதனால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. நகை வாங்குவோர் உற்சாகம் அடைந்துள்ளார்.
-
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications