சென்னையில் இன்று தங்கம் விலை சரசரவென சரிவு.. திருமண வீட்டாருக்கு மகிழ்ச்சி தந்த மாற்றம்
சென்னை: லாக்டவுனால் மாறிப்போன தங்கத்தின் விலையால் அதிர்ச்சியுள்ள திருமண வீட்டாருக்கு ஆறுதல் தரும் வகையில் விலை சரிந்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு 432 ரூபாய் சரிந்துள்ளது,.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.432 குறைந்த காரணத்தால் ஒரு சவரன் ரூ.38448 வந்துள்ளது. முன்னதாக நேற்று தங்கம் விலை 38880க்கு விற்பனையானது.
தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக 300 முதல் 400 வரை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. தங்கத்தின் விலையில் இன்றைக்கு ஏற்பட்ட சரிவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை ஏற்றம் ஏன்
தங்கம் விலை இன்று நேற்றல்ல எப்போதெல்லாம் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தங்கத்தின் முதலீடு அதிகரித்து தங்கத்தின் விலை விறுவிறு அதிகரிக்கும். ஆனால் இது எப்போதாவது ஒரு முறை தான் நடக்கும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக யாரும் எதிர்பாராத விதமாக தங்கத்தின விலை கடுமையாக உயர்ந்து வருகிறது ஆறு மாதத்தில் 8 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்தது

ரூ.43,328க்கு விற்பனை
தங்கம் விலை இந்திய வரலாற்றில் இல்லாத அளவாக ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் ரூ.43,328க்கு விற்பனையானது. அதன் பிறகு தங்கம் விலை சரசரவென சரிந்தது. அடுத்த இரு மாதங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது 5 ஆயிரம் வரை குறைந்துளளது.

எவ்வளவு ஏற்ற இறக்கம்
கடந்த செப்டம்பர் 28ம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 37920க்கு விற்பனை ஆனது. ஆனால் அடுத்த நாளே சுமார் 600 ரூபாய் அளவிற்கு உயர்ந்து 38500ஐ தொட்டது. அதன்பிறகு கொஞ்சம் ஏறுவது பின்னர் இறங்குவதுமாக உள்ளது, 300 முதல 400 ரூபாய் வரை ஏற்ற இறக்கங்களை தங்கம் தினசரி தங்கத்தின் விலை சந்தித்து வருகிறது.

சென்னை தங்கம் விலை
சென்னையில் கடந்த அக்டோபர் 5 தேதி ஒரு சவரனுக்கு ரூ.384 சரிந்து தற்போது ரூ.38416க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் விலை 48 ரூபாய் சரிந்து 4802 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் அடுத்த நாளே அதாவது நேற்று அக்டோபர் 6ம் தேதி சுமார் 384 ரூபாய் உயர்ந்து 3880க்கு விற்பனையாது. ஒரு கிராம் தங்கம் விலை 4860க்ககு விற்பனையானது. சென்னையில் தங்கம் இன்று மாலை நிலவரப்படி ரூ.432 சரிந்து ரூ.38,448க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 4806க்கு விற்பனையாகிறது.

இன்று வெள்ளி விலை
இதனிடையே தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. வெள்ளியின் விலை கிலோவுக்கு நேற்று 65 ஆயிரத்து 300 ரூபாயாக விற்பனையானது. ஆனால் இன்று 1900 ரூபாய் சரிந்து 63 ஆயிரத்து 400 ரூபாயாக விற்பனையாகிறது


Click it and Unblock the Notifications
