ஐப்பசியில் கல்யாணமா அடிச்சது ஜாக்பாட்... தங்கம் விலை பெரும் சரிவு.. நகை கடைகளில் குவியும் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐப்பசியில் கல்யாணம் வைத்துள்ளவர்களுக்கு திருமண நகை வாங்க இது சூப்பர் தருணம். ஏனெனில் தங்கம் விலை ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1,552 அளவுக்கு குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.448 குறைந்தது. இதனால் சவரன் ரூ.38 ஆயிரத்துக்கு வந்துள்ளது. எனினும் தங்கம் விலை இன்னும் அதிக அளவில் குறைய வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. மார்ச் மாதத்தில் 32 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் 43 ஆயிரம் என்கிற நிலையை எட்டியது.

பொருளாதாரம் சரிவு

பொருளாதாரம் சரிவு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை போன்ற காரணங்களால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

 ரூ.43,328க்கு விற்பனை

ரூ.43,328க்கு விற்பனை

கடந்த ஆறு மாதங்களில் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.43,328க்கு விற்பனையானது. இது தான் தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனை நிகழ்ந்தது. அதன் பிறகு தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,820க்கும், சவரன் ரூ.38,560க்கும் விற்பனையாது.

தங்கம் விலை என்ன

தங்கம் விலை என்ன

இந்த நிலையில் நேற்று காலையில் தங்கம் கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.4,755க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.38,040க்கும் விற்பனையாது.. தங்கம் விலை காலையில் விற்பனையான விலையை விட மாலையில் சற்று குறைந்தது. நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.56 குறைந்து ஒரு கிராம் ரூ.4,764க்கு விற்பனையாது., சவரனுக்கு ரூ.448 குறைந்து ஒரு சவரன் ரூ.38,112க்கும் சென்னையில் விற்கப்பட்டது.

மக்கள் ஆர்வம்

மக்கள் ஆர்வம்

தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,552 அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் உற்சாசத்தோடு நகை கடைகளை முற்றுகையிடுகிறார்கள். நகைக்கடைகளில் நகை விற்பனையும் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை எப்படி இருக்கும்

தங்கம் விலை எப்படி இருக்கும்

இதனிடையே சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் தங்கம் விலை நிலவரம் குறித்து கூறுகையில், தங்கம் விலை அடுத்த மாதம் 15ம் தேதி வரை இதுபோல் குறையும். ஏனெனில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது.. மறுபுறம் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது, எனவே அக்டோபர் மாதம் வரை விலை குறையும். அதன் பிறகு அமெரிக்க தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கும். அப்போது தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும். நவம்பர், டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை அதிக அளவில் உயரும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+