Gold Rate Today: மார்க்கெட் ஓபனானதுமே தங்கம் விலை கேட்டாலே காதில் தேன் பாயுதே! சென்னையில் ரேட் என்ன?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.2) சவரனுக்கு ரூ 480 குறைந்துள்ளது. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மார்கெட் விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 480 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,090-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நவம்பர் 30, டிசம்பர் 2 ஆகிய இரு தேதிகளில் சவரனுக்கு ரூ 560 குறைந்துள்ளது.

டிசம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் நேற்று முன் தினம் (நவம்பர் 30) விற்கப்பட்ட விலைக்கே தங்கம் விற்பனையானது. அதன்படி டிசம்பர் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் 57,200 ரூபாய்க்கும் ஒரு கிராம் ரூ 7150 -க்கும் விற்கப்பட்டது. அது போல் வெள்ளியின் விலை கிராம் ரூ 100- க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் நவம்பர் 30-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்தது. இதனால் சவரன் ரூ 57,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,150-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் நவம்பர் 29-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 57,280 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ 2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.4 ஆயிரம் வரை சரிந்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைவதும் கூடுவதுமாக இருந்தது.
ஆனாலும் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை என்பது உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றால் தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சாமானிய மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ 1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.
-
Gold Price: இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! 8 நாட்களில் 4,480 சரிந்தது -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications