Gold Rate Today: குண்டுமணியை விடுங்க! பெரிய சைஸில் ஒட்டியாணமே வாங்கலாம் போலயே! சரியும் தங்கம் விலை!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ 13) சவரனுக்கு ரூ 320 சரிந்துள்ளது. நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ 1080 குறைந்தது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நவம்பர் 13 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்துள்ளது. இதனால் சவரன் ரூ 56,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 80 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,045 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நவம்பர் 12 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1080 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,680 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 135 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,085 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரு நாட்களில் சவரனுக்கு 1520 ரூபாய் குறைந்தது. இன்று ரூ 320 சரிவை அடுத்து மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ 1840 குறைந்துள்ளது.
சென்னையில் நவம்பர் 11ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து காணப்பட்டது. இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம்ரூ.57,760க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராம் ஒன்று ரூ 103-க்கு விற்பனையான நிலையில் நேற்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102க்கு விற்பனையானது.
அது போல் கடந்த 7ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றதால் சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் 57600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு கிராம் தங்கம், 165 ரூபாய் குறைந்து 7200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நவம்பர் 8ஆம் தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 285-க்கும், ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 280-க்கும் விற்பனையானது. சென்னையில் கடந்த 9 ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 58,200க்கு விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை 10 ரூபாய் குறைந்து 7,275 ரூபாய்க்கு விற்பனையானது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.4 ஆயிரம் வரை சரிந்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைவதும் கூடுவதுமாக இருந்தது.
ஆனாலும் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை என்பது உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றால் தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சாமானிய மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ 1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.
பொதுவாக சேமிப்பு என்பது ஒரு பொருளின் மீதான மூலதனம்தான். அந்த வகையில் வீடு, வாசல், நில புலம் வாங்குவது போல் நகை நட்டையும் வாங்கி வைத்தால் அது எந்த காலத்திலும் நமக்கு நஷ்டத்தை கொடுக்காது என்பதுதான் பொருளாதார நிபுணர்கள் சொல்லும் சேமிப்புக்கான டிப்ஸ் ஆகும்.
-
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications