Gold Rate Today: தகதக தங்கம் விலை! இன்று நோ டென்ஷன்! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.22) மார்க்கெட் விடுமுறை என்பதால் நேற்று விற்பனையான விலைக்கே இன்றும் தங்கம் விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு சவரன் தங்கம் ரூ 56,800-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் டிசம்பர் 22 ஆம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் டிசம்பர் 21 ஆம் தேதி விற்பனையான விலைக்கே விற்கப்படுகிறது. அதாவது இன்று ஒரு சவரன் 56,800-க்கும் ஒரு கிராம் ரூ 7,100-க்கும் விற்பனையாகிறது.

gold rate gold price

சென்னையில் டிசம்பர் 21-ஆம் தேதி சவரனுக்கு ரூ 480 உயர்ந்துள்ளது. அதாவது கிராமுக்கு ரூ 60 குறைந்து ஒரு கிராம் ரூ.7,100-க்கும் ஒரு சவரன் ரூ 56,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் டிசம்பர் 20-ஆம் தேதி சவரனுக்கு ரூ 240 குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ 30 குறைந்து ஒரு கிராம் ரூ.7,040-க்கும் ஒரு சவரன் ரூ 56,320-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 98-க்கு விற்பனையானது.

சென்னையில் டிசம்பர் 19ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 520 குறைந்தது. ஒரு கிராமுக்கு ரூ 65 குறைந்து கிராம் ஒன்று ரூ 7070-க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ 56,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளியின் விலையும் ஒரு ரூபாய் குறைந்து ரூ 99-க்கு விற்பனையானது.

சென்னையில் டிசம்பர் 18ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்தது. இதனால் ஒரு சவரன் ரூ 57,080 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ 15 குறைந்து கிராம் ரூ 7135 -க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையானது.

சென்னையில் டிசம்பர் 17ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் ஒரு சவரன் ரூ 57,120 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ 7140 -க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையாகிறது.

டிசம்பர் மாதத்தில் அதிகபட்ச தங்கம் விலை: இந்த டிசம்பர் மாதத்தில் இவ்வளவு குறைந்து இருப்பது, நேற்றுதான். முன்னதாக கடந்த கடந்த 2 ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை 7090க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பிறகு நேற்றைக்கு தான் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7070 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நடப்பு டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக டிசம்பர் 11 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7285 வரை சென்றுள்ளது.

நவம்பர் மாதத்தில் எவ்வளவு இருந்தது?: கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 7385 ரூபாய் வரை விற்பனை ஆனது. குறைந்தபட்சமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை 7065 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அக்டோபர் மாதம் தங்கம் விலையில் சரிவு: அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி சென்னையில் தங்கம் ஒரு கிராம் 7,455 -க்கு விற்பனையானது. இது அதிகபட்சமாகும். அது போல் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ஒரு கிராம் 7.025 -க்கு விற்பனையானது. இது குறைந்தப்பட்ட விலையாகும்.

10 நாட்களில் தங்கம் விலை: கடந்த 10 நாட்களில் 22 கேரட் தங்கம் விலை சராசரியாக ரூ 7164-க்கு விற்பனையானது. கடந்த ஓராண்டில் தங்கம் விலை சராசரியாக கிராம் ரூ 6,598-க்கு விற்பனையானது. அது போல் கொரோனா காலகட்டத்தில் சராசரியாக ஒரு கிராம் தங்கம் ரூ 5,172 முதல் ரூ 5,344 வரை விற்பனையானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+