அதிரடியாக உயர தொடங்கிய தங்கம் விலை.. நகைகளில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம்! என்ன காரணம்?
சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சரிந்த நிலையில் இன்று 136 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் விலை சவரன் 37112க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.
ஆனால் அடுத்த மூன்று மாதங்களில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்- இதனால் இப்போது தங்கம் வாங்குவது சூப்பர் வாய்ப்பு என்று கூறுகிறார்கள்.
தங்கம் விலை கடந்த டிசம்பர் 8ம் தேதி 37088க்கு விற்பனையாகிய நிலையில் டிசம்பர் 8ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.664 அதிகரித்து ரூ.37664-க்கு விற்பனையானது.. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4684க்கு விற்பனையானது.

தங்கம் விலை
ஆனால் தங்கம் விலை டிசம்பர் 9ம் தேதி அதிரடியாக 422 ரூபாய் சரிந்து 37472க்கு விற்பனையானது. அதேநேரம் டிசம்பர் 10ம் தேதியான நேற்று தங்கம் விலை 496 ரூபாய் சரிந்தது. இதனால் நகை வாங்குவோர் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். தங்கம் விலை சவரன் நேற்று 36976க்கு விற்பனையானது. ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை 4622க்கு விற்பனையானது.

நிச்சயமற்ற நிலை
ஆனால் தங்கம் விலை இன்று காலை ஒரு நாளில் 136 ரூபாய் உயர்ந்து சவரன் 37112க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 4639க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையில் நிச்சயமற்ற தன்மை காரணமாக கடந்த ஒரு வாரமாக 37 ஆயிரத்தை தாண்டுவதும், 36 ஆயிரத்திற்கு குறைவதுமாக உள்ளது.

சரிந்த தங்கம் விலை
தங்கம் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்த நிலையில் சரிவினை சந்தித்துள்ளது. நகையில் முதலீடு செய்ய சரியான தருணம் என்று நகை வியாபரிகள் கூறுகிறார்கள். தங்கம் விலை கடந்த 4மாதத்தில் மட்டும் 43 ஆயிரததில் இருந்து 37 ஆயிரம் என்கிற அளவுக்கு சரிந்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தங்கம் உயரும்
தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி அண்மையில் தொலைக்காட்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், எப்படி தங்கம் விலை குறைந்ததோ, அதேபோல் தங்கம் விலை உச்சம் பெறும். இந்த மாத இறுதியில் புதிய உச்சம் தொடும். 2021 மார்ச்சில் இதுவரைஇல்லாத அளவுக்கு தங்கம் விலை உயரும். ஏனெனில் தங்கத்தின் மீதான நம்பிக்கை மற்றும் முதலீடுகள் அதிகரித்துள்ளது. என்றார். உலக அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்கிறார்கள். அடுத்து வரும்காலங்களில்தங்கம் விலைஇன்னும் அபரிதமாகவே உயரும்" என்றார்.

கடைகளில் குவியும் மக்கள்
எனவே தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த நிச்சயமற்ற தன்மையின் போதே அதிக அளவு தங்கம் வாங்க நம் மக்கள் விரும்புகிறார்கள். பலரும் நகைகளை எடுத்து வைப்பது இப்போது சிறப்பான தருணம் என்று கருதி நகை கடைகளில் குவிகிறார்கள். நகை வாங்குவதற்கு இது உகந்த காலம் என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications