Gold Rate Today: நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. இன்று மளமளவென குறைந்த தங்கம் விலை! உடனே போங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

தமிழகம் உள்பட நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் தங்கத்தின் மீதான மோகம் என்பது தொடர்ந்து அதிகமாக உள்ளது. இதனால் தங்கம் மிகவும் மதிப்புமிக்க நகையாக மாறி உள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.4 ஆயிரம் வரை சரிந்தது.

gold rate gold price

Image: AI created

அதன்பிறகு மீண்டும் தற்போது தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 9ம்தேதி முதல் நேற்று வரை 11ம் தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து தங்கத்தின் விலை என்பது அதிகரித்தது. நேற்று தங்கத்தின் விலையில் மாற்றம் என்பது ஏற்படவில்லை.

இந்நிலையில் தான் கடந்த 3 நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று மளமளவென சரிந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்தது. இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம்ரூ.57,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்க ரூ.55 குறைந்து ரூ.7,230க்கு விற்பனையாகி வருகிறது.

முன்னதாக நேற்று தங்கத்தின் விலையில் மாற்றம் என்பது ஏற்படவில்லை. இதனால் நேற்று முன்தினம் இருந்த விலையிலேயே தங்கம் விற்பனையானது. அதன்படி நேற்று, நேற்று முன்தினம் ஆகிய 2 நாட்களாக ஒரு சவரன் ரூ 58,280 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுபோல் கிராமுக்கு ரூ 80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,285-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதற்கு முன்பாக கடந்த 11ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 640 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 58,280 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,285-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் கிராமுக்கு ரூ 1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ 103-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,03,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+