நகை பிரியர்களுக்கு நல்ல செய்தி.. இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 2 நாட்களில் இவ்வளவு சரிவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சரிவைச் சந்தித்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் குறையுமா? அல்லது எக்குத்தப்பாக எகிறுமா என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்று லேசாக குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து உள்ளது.

சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதவாக்கில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது.

gold rate gold chennai

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தங்கத்தின் விலை சரிவு நின்று, அதன்பிறகு வேகமாக தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.

இந்தச் சூழலில் தான் நேற்று தங்கம் விலை கடுமையான சரிவைக் கண்டது. தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூபாய் 560 குறைந்து 56,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 70 குறைந்து, 7,030 க்கு விற்பனை செய்யப்பட்டது.

பண்டிகை காலத்தில் தங்கம் விலை கடும் சரிவைக் கண்டது நகை பிரியர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை ஏற்றம் காணுமா? அல்லது மீண்டும் குறையுமா என பலரும் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் இன்று தங்கம் விலை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இகிராமுக்கு ரூ.5 குறைந்து உள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று ரூ.7,025க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.56,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூபாய் 560 குறைந்த நிலையில் இன்று மேலும் 40 ரூபாய் குறைந்துள்ளது. 2 நாட்களில் மொத்தமாக 600 ரூபாய் குறைந்துள்ளது. இன்னும் விலை குறையுமா, அல்லது மீண்டும் ஏற்றத்தை நோக்கிச் செல்லுமா என அறிய நகை பிரியர்கள், பொதுமக்கள் பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

வெள்ளி விலை மாற்றம் இன்றி விற்பனையாகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும், பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+