பெரியளவில் சரியும் தங்கம் விலை? "இது" நடந்தால் நிச்சயம் குறையும்! அடித்து சொல்லும் ஆனந்த் சீனிவாசன்
சென்னை: இந்தாண்டு தொடக்கம் முதல் உயர்ந்து வந்த தங்கம் விலை சட்டென கடந்த மாதம் பெரியளவில் குறைந்தது. இதனால் தங்கம் விலை மேலும் குறையுமோ என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்துக் கிடக்கிறார்கள். இதற்கிடையே வரும் காலங்களில் தங்கம் விலை குறையுமா.. அப்படிக் குறைய வேண்டும் என்றால் எது நடந்தால் குறையும்.. எந்தளவுக்குக் குறையும் என்பது தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
இந்தாண்டு தொடக்கம் முதல் தங்கம் விலை தாறுமாறாக எகிற ஆரம்பித்தது. இதற்குப் பிரதானக் காரணமே டிரம்ப் தான். அவர் கொண்டு வந்த பொருளாதாரக் கொள்கைகள் தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்தது. வரி தொடங்கி அமெரிக்க ஷட் டவுன், சீனா உடனான வர்த்தக மோதல் என டிரம்ப் படுத்தி எடுத்து வந்தார். இதனால் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து உச்சம் தொட்டது.

பிரேக் போட்ட தங்கம்
இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் தங்கம் விலை சட்டென ஒரு சடன் பிரேக் போட்டது. கடந்த மாதம் பிற்பகுதியில் தங்கம் விலை ஓரிரு நாட்களில் கணிசமாகக் குறைந்தது. அதன் பிறகு அதே ரேஞ்சில் இருக்கிறது. தங்கம் விலை மீண்டும் அதேபோல குறையுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கிறார்கள். இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை மேலே கீழே போய் வருகிறது. வெள்ளியில் இன்னுமே வாங்கும் விலைக்கும், விற்கும் விலைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கவே செய்கிறது. இதனால் வெள்ளியைக் கடையில் வாங்கியோர், இடிஎஃப் ஆக வாங்கியோருக்கு மிகப் பெரிய நஷ்டம் தான். அந்த வலியை எப்படித் தாங்கப் போகிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஆனால், நடந்தது நடந்துவிட்டது.. இனிமேலாவது நம்ம இது போல ரிஸ்க் எல்லாம் எடுக்காமல் இருப்பது நல்லது.
இது நடந்தால் சரியும்
தங்கம் விலை 4000 டாலரில் நிற்கிறது. ஒவ்வொரு நாளும் அது வலிமையான பேஸாக மாறுகிறது. எனவே, தற்போதைய சூழலில் தங்கம் விலையில் மிகப் பெரிய சரிவு வர வாய்ப்பில்லை. அப்படிச் சரிவு வர வேண்டும் என்றால் புவிசார் அரசியல் மாற வேண்டும்.. இல்லையென்றால் அமெரிக்க பைனான்சிங் சிஸ்டம் முழுமையாக மாற வேண்டும்.
அங்கு அமெரிக்க நீதிமன்றங்கள் சொல்வதையும் ட்ரம்ப் கேட்க மறுக்கிறார். அமெரிக்க பெடரல் வங்கிக்கு எதிராகவும் தகராறு செய்து கொண்டு இருக்கிறார். இந்த போக்கு இருக்கும் வரை.. அமெரிக்காவில் வருவாய் பற்றாக்குறை இருக்கும் வரை இந்தப் பிரச்சினை சரியாகாது.
டிரம்ப் அரசியல்
அதேபோல அமெரிக்காவில் புட் ஸ்டாம்ப் என ஒன்று இருக்கும். அதாவது ஏழைகளுக்கு ரேஷன் கொடுப்பதற்குப் பதிலாக அங்கு ஃபுட் ஸ்டாம்ப்ஸ் கொடுப்பார்கள்.. அதற்கான நிதியையும் டிரம்ப் குறைத்துள்ளார். அமெரிக்க ஷட் டவுனால் நிதியில்லாமல் போனதே இதற்குக் காரணம். எமர்ஜென்சி நிதியில் இருந்து எடுத்துத் தருமாறு நீதிமன்றம் சொன்னது. இருப்பினும், பாதித் தொகையை மட்டுமே தருவேன் என டிரம்ப் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் ஏழ்மையில் நிலையில் புட் ஸ்டாம்ப்ஸ் வாங்குவோர் எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பவர்கள் ஆவர். இதுதான் டிரம்ப் செய்யும் அரசியல்.
இது மாதிரியான அரசியலை டிரம்ப் செய்யும் வரை தங்கத்திற்குப் பயம் கிடையாது. தங்கம் விலை சரியாமல் காப்பவர் போல ட்ரம்ப் இருக்கிறார். இப்படியே கொஞ்சம் தங்கம் விலை ஸ்டெபிலைஸ் ஆகும். ஒரு பேஸ் உருவாகும். அப்படி பேஸ் உருவானால் தங்கம் விலை அதற்கு மேல் குறையாது" என்றார்.
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications