தமிழகம் தப்பி ஓடிய ஸ்வப்னா? வழியில் 'நந்தினியிடம்' பேசியதாக பரபர தகவல்.. வெளியான சிசிடிவி காட்சி
சென்னை: தமிழகத்தின் செங்கோட்டை பகுதிக்கு ஸ்வப்னா காரில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Recommended Video
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் வந்த நிலையில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய சரக்கு பிரிவில் ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்துஅந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியை திறந்து பார்த்தனர்.
அப்போது அதில் 30 கிலோ தங்கம் இருந்ததும், அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி என்பதும் தெரியவந்தது. சுங்க இலாகா அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியபோது, தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

வழக்கு மாற்றம்
இவர் கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் பணி புரிந்தவர் எனக் கூறி எதிர்க்கட்சிகள் பிரச்சினை கிளப்பின. எந்த விசாரணைக்கும் தயார் என்றார் பினராயி விஜயன். இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமை (NIA) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகள்
இந்த நிலையில், திருவனந்தபுரத்திலிருந்து எஸ்யூவி காரில், ஸ்வப்னா தமிழகம் தப்பிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
எஸ்யூவி காரில் தமிழகத்தின் நெல்லை மாவட்டம், செங்கோட்டை ரூட்டில் ஸ்வப்னா சென்றுள்ளார்.

பெண்ணிடம் பேச்சு
போகும் வழியில், அந்த கார் சிறிது நேரம் நின்றுள்ளது. அப்போது நந்தினி என்ற பெண்ணுடன் ஸ்வப்னா பேசியதாக கூறப்படுகிறது. இதை அந்த பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அவரிடம் சில ரூட்களை கேட்டதாகவும் தான் கூறியதாகவும், காருக்குள் குழந்தைகள் இருந்ததாகவும் நந்தினி தெரிவித்துள்ளார்.
அதில் போனது ஸ்வப்னாதானா, தில்லாலங்கடி வேலை பார்த்த அவருக்கு ரூட் தெரியாதா என்ற கேள்விகளும் எழுகின்றன.

விசாரணை
இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து ஸ்வப்னாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில், ஏற்கனவே கேரள காவல்துறை மற்றும் சுங்கத்துறை ஷோபனாவை தேடி வருகிறது. மூணாறில் அவர் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஸ்வப்னாவை அங்கேயும் போலீசார் தேடியுள்ளனர். அவர் நாகர்கோவிலில் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டு, அங்கும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
-
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications