Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய சொந்த நிலத்தில் கிணறு தோண்டும்போதோ அல்லது வீட்டின் அஸ்திவாரத்திற்காகக் குழிகள் எடுக்கும்போதோ தங்கம், வெள்ளி நாணயங்கள், சிலைகள் அல்லது வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் கிடைப்பது அரிதானது என்றாலும் சாத்தியமானது.. அப்படி ஒரு சூழல் ஏற்படும்போது, அந்தப் பொருட்கள் நமக்குத்தான் சொந்தம் என்று பலரும் கருதுகிறார்கள்.. ஆனால் இதற்கென சில சட்டமுறைகள் உள்ளன. அவைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய சட்டத்தின்படி பூமிக்கு அடியில் கிடைக்கும் எந்தவொரு பொருளும் 'தேசிய சொத்தாகவே' கருதப்படுகிறது.. இது குறித்து 1878-ம் ஆண்டு இயற்றப்பட்ட 'இந்திய புதையல் சட்டம்' (Indian Treasure Trove Act) தெளிவான விளக்கங்களை அளிக்கிறது..

Gold found in private property Indian Treasure Trove Act 1878 Ancient idols found in land Reporting treasure to Collector Archaeological Survey of India Penalty for hiding treasure Treasure ownership India Gold silver coins found 1878

இந்தச் சட்டத்தின்படி, 10 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள எந்தப் பொருளும் மண்ணுக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டால், அது அரசுக்கு சொந்தமானதாகும்.. அந்த இடம் உங்களுடைய பட்டா நிலமாக இருந்தாலும், சட்டப்படி அந்தப் புதையல் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது கிடையாது. இத்தகைய பொருட்கள் கிடைத்தவுடன், எவ்வித தாமதமும் இன்றி அந்தப் பகுதியின் மாவட்ட ஆட்சியருக்கு எழுத்துப்பூர்வமாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அந்த அறிவிப்பில், அந்தப் பொருள் எப்போது கிடைத்தது, எங்கே கிடைத்தது, அதன் தோராயமான மதிப்பு மற்றும் அது என்ன வகையான பொருள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்..

தகவல் கிடைத்ததும், அந்தப் பொருட்களை அரசு தனது பாதுகாப்பில் எடுத்துக்கொள்ளும்.. மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக ஒரு விசாரணையை நடத்துவார்.. அந்தப் பொருளுக்கு யாராவது வாரிசுதாரர்கள் அல்லது உரிமை கோருபவர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து பொது அறிவிப்பு வெளியிடப்படும்.. ஒருவேளை அந்தப் பொருள் 100 வருஷத்துன்னு மேலான பழமையான ஒன்றாக இருந்தால், அது வரலாற்றுச் சிறப்புமிக்கது எனக் கருதப்பட்டுத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்படும்..

புதையலை கண்டெடுத்தவருக்குக் கிடைக்கும் பலன்கள் குறித்தும் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.. ஆய்வு முடிவில் அந்தப் பொருளுக்கு உரிமை கோர யாரும் இல்லை எனத் தெரிந்தால், அந்தப் புதையலின் மதிப்பில் ஒரு பகுதியை நிலத்தின் உரிமையாளருக்கும், அதை தற்செயலாகக் கண்டெடுத்தவருக்கும் அரசு பிரித்து வழங்கும்.. பொதுவாக, மதிப்பிடப்பட்ட தொகையில் ஒரு கணிசமான பங்கு நில உரிமையாளருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது..

ஆனால், இந்தப் பொருட்களை ரகசியமாக மறைப்பதோ அல்லது விற்க முயற்சிப்பதோ சட்டப்படி பெரும் குற்றமாகும்.. அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டால், நில உரிமையாளருக்கு எந்தவிதமான இழப்பீடும் கிடைக்காது.. அதுமட்டுமின்றி, அபராதம் அல்லது சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

மண்ணுக்கு அடியில் கிடைக்கும் வரலாற்றுச் சின்னங்கள் நம்முடைய நாட்டின் கலாச்சார அடையாளங்கள் என்பதால், அவற்றை முறைப்படி அரசிடம் ஒப்படைப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்.. இவ்வாறு சட்டத்தைப் பின்பற்றுவதன் மூலம் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம்..

இதன் மூலம் தேவையற்ற சட்ட சிக்கல்களை தவிர்ப்பதுடன், நம்முடைய நாட்டின் மறைக்கப்பட்ட வரலாற்றை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும் நீங்கள் திகழ முடியும்.. எளிமையாக சொன்னால், பூமிக்கு அடியில் இருக்கும் ரகசியங்கள் அனைத்தும் சட்டப்படி அரசாங்கத்தின் சொத்துக்களே.. அவற்றை முறையாக அரசிடம் ஒப்படைத்து, அதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை பெறுவதே சரியான வழிமுறையாகும்.. நம் மண்ணின் பெருமையை சொல்லும் இத்தகைய சான்றுகளை பாதுகாப்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+