நிஜமாவே சிக்ஸர்.. 2 லட்சம் பேருக்கா?.. "தங்கம்" சொன்ன குட் நியூஸ்.. அடித்து ஆடும் திமுக..!
2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இது எதிர்க்கட்சிகளை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
இந்த முறை திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அதிமுக தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.. குறிப்பாக, திமுக மீது ஊழல் புகார்களை எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு குறைபாடுகளை ஓபிஎஸ்ஸும் விடாமல் சொல்லி வருகிறார்கள்.
இருவருமே அவரவர் விஷயங்களில் இதுவரை உறுதியாக உள்ளனர்.. இதனிடையே, மாஜி அமைச்சர்களும் திமுகவை விமர்சித்து கொண்டிருக்கிறார்கள்.. நேற்றுகூட செல்லூர் ராஜூ, மதுரையில் ஒரு பேட்டி தந்திருந்தார்..

திமுக அதிரடி
அதில், திமுக அறிவித்த திட்டங்கள் பல தோல்வியடைந்துவிட்டது.. இதை திமுகவே எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருந்தார்.. எனினும், திமுக எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் அடுத்தடுத்த அதிரடிகளில் இறங்கிவிட்டது.. அந்த வகையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. தமிழகத்தில் ஓராண்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது, பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தங்கம் தென்னரசு
அமைச்சர் சொல்லும்போது, தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி இளைஞர்கள் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்துக் கொண்டிருக்கின்றனர்... தற்காலி பணியாளர்கள், தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆயிரக்கணக்கில் வேலைக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர்... இதுபோன்ற சூழலில் அந்தந்த மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் உருவாகும் போது அந்தந்த மாநிலத்திற்கு முன்னுரிமை தந்து அந்த மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு குறைந்தபட்சம் பெரும்பான்மையான பணிகள் வழங்கப்பட வேண்டும்.

வேலைவாய்ப்பு
இதற்கு ஏற்றவகையில் தேவையானால் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.... திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து புதிய அன்னிய முதலீடுகள், புதிய முதலீடுகளை பெற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டுக் கொண்டிருக்கிறது... ஆட்சிக்கு வந்து 10 மாதங்களில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 69 ஆயிரத்து 375 கோடியே 54 லட்சம் ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது.

அதிமுக
இப்படிப்பட்ட சூழலில், ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.. இந்த அறிவிப்பானது அதிமுகவை கடுப்பாக்கி உள்ளது.. எந்த அறிவிப்பு வெளியிட்டாலும், விமர்சனம் செய்து வரும் நிலையில், இதற்கு என்ன சொல்ல போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications