குட் நியூஸ்.. அரசு வேலை + கை நிறைய சம்பளம்.. தமிழ்நாடு அரசின் மணி மணியான அறிவிப்பு.. பலே சிவசங்கர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது,. இது போக்குவரத்து கழகத்துக்கும், பொதுமக்களுக்கும் நிம்மதியை தந்து வருகிறது.

போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

Good announcement by Tamil Nadu Government and vacancies in transport sector will be filled soon

இந்தவகையில், 10 நாட்களுக்கு முன்புகூட, பெரம்பலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அரசு போக்குவரத்து கழக பஸ்களில், டிரைவர்கள், கண்டக்டர்கள் பற்றாக்குறையால். பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதே? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

பொங்கல் பண்டிகை: அதற்கு அமைச்சர் சிவசங்கர், "பொங்கல் பண்டிகை நேரத்தில், அதுவும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது கூட எந்த ஒரு பஸ்ஸூம் நிறுத்தப்படாமல் அனைத்து பஸ்களுமே இயக்கப்பட்டன.. அதனால், அதிக அளவில் காலி பணியிடங்கள் இல்லை. அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஆள் எடுக்கும் பணியில் எழுத்து தேர்வுகள் முடிவுற்ற நிலையில், இப்போது நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. அது முடிவற்ற பிறகு அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

இது மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களிலும் காலியாக உள்ள ஓட்டுனர்கள் மற்றும் நடத்தினர்களை தேர்வு செய்யும் நடவடிக்கை தொடங்கி விட்டது.. அந்த பணி முடிந்ததுமே, அவர்களும் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர்" என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

கேள்வி: இந்நிலையில், தற்போது நடந்து வரும் சட்டசபை கூட்த்திலும், இதே கேள்வி எழுப்பப்பட்டது.. சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பேராவூரணி - பட்டுக்கோட்டை இடையே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படுமா? என்று பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சொன்னதாவது:

அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டதாக சொல்லப்படும் பஸ்கள், கொரோனா காரணமாக நிறுத்தப்படவில்லை. போதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் இல்லாத காரணத்தினால்தான், அந்த பஸ்கள் எல்லாம் நிறுத்தப்பட்டன.

திமுக ஆட்சி: ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு டிரைவர்களை நியமனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மற்ற போக்குவரத்து கழகங்களுக்கு பணியாளர்களை நியமனம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டவுடன் நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.. அமைச்சர் சிவகங்கரின் இந்த உறுதியானது, போக்குவரத்து துறைக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதுடன், பொதுமக்களுக்கும் நிம்மதியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+