Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்சார அரசு பஸ்கள்.. அதைவிடுங்க.. ஹோட்டல் ஓனர்களுக்கு "நம்பிக்கை" தந்த தமிழக அரசு.. இனிமேல் நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் பல்வேறு அதிரடிகளை தமிழக போக்குவரத்து துறை மேற்கொண்டு வரும்நிலையில், இன்னொரு நம்பிக்கை தகவலை வெளியிட்டுள்ளது.. இது பயணிகளுக்கு மிகுந்த குஷியை தந்து வருகிறது.

தமிழக அரசு போக்குவரத்து கழகம், மக்களின் நலனை கருத்தில்கொண்டு, கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறது. அத்துடன், முன்பதிவு போன்ற வசதிகளிலும் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

Good announcement by Tamil Nadu Transport Dept about Electric Buses

முன்பதிவு: குறிப்பாக, ஒரு நாளைக்கான முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51,046 இருக்கைகளிலிருந்து 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி கூடுதல் பயணிகள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தவிர்த்து பிற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து பயணிக்க இயலும்.

மஞ்சள் நிற பஸ்கள்: அதேபோல, மஞ்சள் நிற பஸ்களை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.. இதைத்தவிர, டபுள் டக்கர் பஸ்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பயணிகளிடம் ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மின்சார பேருந்துகளும் வரப்போகின்றன.. தமிழக அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும் மின்சார பேருந்துகளில் பிரச்சினைகள் இருக்காது என்று போக்குவரத்து துறையும் மிகப்பெரிய நம்பிக்கையை தந்துள்ளது.

அமைச்சர் சிவசங்கர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது: "தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலகளவில் மின்சார பேருந்துகள் பரவலாக இயக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ஒரு தனியார் பேருந்து தீப்பற்றியது. இதுதொடர்பாக ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.

அரசு பஸ்கள்: தமிழக அரசு சார்பாக கொள்முதல் செய்யப்படும் பஸ்கள் அனைத்துமே, முழுமையாக பரிசோதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்துதான் வாங்கப்படும்.. அதனால், அதில் எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது.

Good announcement by Tamil Nadu Transport Dept about Electric Buses

வாடகை வாகனங்களை கண்காணிக்கும் பணிகளை போக்குவரத்துத்துறை தொடர்ந்து மேற்கொள்ளும். நெடுஞ்சாலை உணவகங்களில் சிறப்பான சேவை அளிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதேநேரம், அதிகாரிகளிடம் உணவக உரிமையாளர்கள் முன்வைத்த கோரிக்கையின்படி கழிப்பறைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து மறுபடியும் ஆய்வு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

பெருத்த நம்பிக்கை: உணவுப் பொருட்களுக்கு அதிக கட்டணம் வசூலித்த திண்டிவனத்தில் உள்ள 2 ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஆதாரத்தோடு புகார் அளிக்கும்போது நிச்சயமாக அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அமைச்சர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+