சில்மிஷ சீண்டல்..இனி ஒருத்தரும் வாலாட்ட முடியாது.. பெண்கள் மீது "கை" வைத்தால், இனி அவ்ளோதான்..சபாஷ்
சென்னை: பெண்கள் மீது இனி ஒருத்தரும் "கை" வைக்க முடியாது.. அதையும் மீறி யாராவது வாலாட்ட நினைத்தால், அந்த அலாரம் ஒலி அடித்துவிடும்..!!
நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் பெருகி கொண்டிருக்கின்றன. பிஞ்சு குழந்தை என்றுகூட காம வெறியர்கள் பார்ப்பது கிடையாது.. வயதான பாட்டி என்றுகூட இந்த காமுகர்கள் கருதுவது கிடையாது.

சபாஷ் போலீஸ்: போக்சோ போன்ற சட்டங்கள் இருப்பது தெரிந்தும்கூட, இவர்களை போன்றோரின் அட்டகாசங்களை அடக்க முடிவதில்லை.. அதனால்தான், காவல்துறையும் பெண்களின் பாதுகாப்பில் முழு அக்கறையை செலுத்தி வருகிறது. பெரும்பாலும் பாலியல் புகார்கள் ஆன்லைன் மூலம் அதிகமாக அளிக்கப்பட்டு வருகிறது. அப்படி பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது சைபர் க்ரைம் போலீசாரால் 48 மணி நேரத்தில் விசாரணை நடத்தி தீர்வு காணப்படுகிறது.
இதைத்தவிர, பெண்களுக்கெனவே உருவாக்கப்பட்ட இலவச அவசர தொலைபேசி எண் 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் போதும்.. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பும், ஆலோசனையும் வழங்க அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள். 1098 என்ற ஹெல்ப் லைன் நம்பருக்கு தகவல் கொடுக்கும்போது உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.
வசதிகள்: இப்படி இன்னும் நிறைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாலியல் சீண்டல் தடுப்பு சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். சென்னையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் இந்த சாதனத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த, வினோதினி சர்மா, டயானா பானிக், சத்யன் சுந்தரராஜன், ஆனந்த் கார்த்திக் ஆகியோர் இணைந்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த புதிய சாதனத்தை உருவாக்கி உள்ளார்களாம்.
மா.. மா: இது குறித்து அவர்கள் ஒரு பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில் இந்த கருவி குறித்து விரிவாக சொல்லி உள்ளார்கள்.. "பெண்கள் பாலியல் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக, அவர்கள் உடலில் அணிந்து கொள்ளும் வகையில், இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, "மா" என்று பெயரிட்டுள்ளோம்.
இந்த சாதனத்தை அணிந்திருக்கும் பெண், பாலியல் சீண்டலுக்கு உள்ளானால், உடனடியாக அவரது பெற்றோர், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன், கன்ட்ரோல் ரூமுக்கு எச்சரிக்கை தகவல் சென்றுவிடும். சம்பந்தப்பட்ட பெண் எங்கிருக்கிறார் என்ற விபரமும் சென்றடையும்.
எச்சரிக்கை தகவல்: பாதிக்கப்படும் பெண் சுய நினைவுடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எச்சரிக்கை தகவல் தானாகவே சென்றுவிடும்.. அதுமட்டுமல்ல, இந்த சாதனம் அலாரம் ஒலி எழுப்பி, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் உதவியை நாட உதவும்.
குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதுதான் நாட்டின் முதல் பாலியல் சீண்டல் தடுப்பு சாதனம்.. இதற்காக மத்திய அரசின் காப்புரிமையை பெற்றிருக்கிறோம். இந்த சாதனத்தை மேலும் நவீனப்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர, அரசின் உதவி தேவை" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்பார்ப்பு: பெண்களின் பாதுகாப்புக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பல்வேறு நடவடிக்கைளையும், முன்னெடுப்புகளையும் மேற்கொண்டுவரும் அரசு, நிச்சயம், இந்த பாலியல் கண்டுபிடிப்பு கருவியை அமலாக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அத்துடன், பெண்களுக்கும் பெருத்த நம்பிக்கை ஏற்படுவதுடன், பெண்கள் மீது "கை" வைக்க நினைக்கும் அத்தனை பேருக்கும் உள்ளுக்குள் ஒருவித "அச்சஉணர்வு" ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications