ஆதார் கார்டு வேலைக்கு இனி அலையாதீங்க! உங்க போன்லயே சூப்பர் அப்டேட்! மத்திய அரசு எடுத்த நல்ல முடிவு
சென்னை: நம்மில் பலருக்கும் ஆதார் கார்டில் பெயர் மாற்றுவது, அட்ரஸ் திருத்துவது, அல்லது போன் நம்பரை அப்டேட் செய்வது போன்ற வேலைகளுக்கு ஆதார் மையம் தேடிப் போவது மிகப்பெரிய தலைவலியாக இருக்கும்... அதுமட்டுமல்ல அந்த ஆதார் மையம் எங்கே இருக்கிறது? அது எப்போது திறந்திருக்கும்? போய் நின்றால் கூட்டம் அதிகமாக இருக்குமா? என்ற கவலைகள் ஏராளம். இதற்குதான் ஒரு சூப்பரான தீர்வை மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ளது.. அதை பற்றி பார்ப்போம்
ஆதார் மையம் நமக்கு அவசியமான ஒன்று.. எனவே, மத்திய அரசின் மின்னணுவியல் அமைச்சகம் புதிய வசதியை செய்து தர போகிறது. அதன்படி, இனிமேல் கூகுள் மேப்ஸ் மூலமாகவே, அருகிலுள்ள ஆதார் மையத்தை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.

ஆதார் சென்டர்
இந்த புதிய வசதி எப்படி வேலை செய்கிறது தெரியுமா? நீங்கள் கூகுள் மேப்ஸை திறந்து, "Aadhaar Centres near me" அல்லது "ஆதார் மையம்" என்று தேடினால் போதும். உங்களுக்கு மிக அருகில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்கள் எல்லாம் மேப்பிலேயே காட்டப்படும். அதுமட்டுமல்லாமல், அந்த மையத்திற்கு நீங்கள் எப்படி செல்வது, எவ்வளவு நேரம் ஆகும் போன்ற வழிகாட்டுதல்களையும் அது கொடுத்துவிடும்.
முக்கியமாக, அந்த ஆதார் மையம் இப்போது திறந்துள்ளதா அல்லது மூடிவிட்டதா என்பதையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். இதனால், தூரமான இடத்திற்குப் போய்விட்டு, கடை மூடியிருந்தால் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை இனி இருக்காது.
கூகுள் மேப் - டோக்கன்
பெரும்பாலான மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் முறைதான் இருக்கிறது. கூகுள் மேப் மூலம் மையத்தைத் தேடி கண்டுபிடித்து, உடனே டோக்கன் வாங்கிவிட்டு, வரிசையில் அதிக நேரம் நிற்காமல் உங்கள் வேலையை எளிதாக முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிடலாம்.
இந்த மையங்களில் புதிய ஆதார் கார்டு எடுப்பது முதல், கைரேகை மாற்றுவது வரை அனைத்தும் செய்யலாம். இதில் புதியதாக ஆதார் எடுப்பதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது. பெயர், முகவரி போன்ற சின்ன சின்ன திருத்தங்கள் செய்ய 75 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்.
அதேபோல, 5 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் அப்டேட் செய்ய கட்டணம் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு 125 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
புதிய அம்சங்களும் பல வசதிகளும்
இது போக, கூகுள் மேப்ஸில் மேலும் சில சுவாரஸ்யமான புதிய அம்சங்களும் வந்திருக்கின்றன. அதாவது பைக்கில் செல்வோருக்கு, கார் சிம்பலுக்கு பதிலாக பைக் சிம்பலை மாற்றிக்கொள்ளலாம். இதில் ஸ்போர்ட்ஸ் பைக், ஸ்கூட்டர் என எட்டு விதமான வண்ணங்களில் உங்கள் வாகனத்திற்கு ஏற்ற மாதிரி சிம்பலை வைத்துக்கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், நீங்கள் போற வழியில் சாலை பணிகள் நடந்தாலோ, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தாலோ கூகுள் மேப் உடனே உங்களுக்கு அலர்ட் செய்யுமாம்,.. மேலும் மாற்று பாதையையும் காட்டும். சில முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயிலுக்க தேவையான டிக்கெட்டுகளையும் நீங்கள் கூகுள் மேப் மூலமாகவே புக்கிங் செய்து கொள்ளலாம். மொத்தத்தில், இந்த தொழில்நுட்பம் பொதுமக்களின் அலைச்சலைக் குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்த பெரிதும் உதவும் என்றே நம்பப்படுகிறது...!!












Click it and Unblock the Notifications