புது அமைச்சர் வந்ததும்.. எல்லாமே புதுசா மாறுதே.. ஆவினில் நடக்கும் அதிரடி மாற்றம்.. இதை முதல்ல படிங்க
சென்னை: ஆவின் பால் பாக்கெட்டுகளில் புதிய மாற்றங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.

மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
ஆவின்: ஆவின் பால் பாக்கெட்டுகளில் புதிய மாற்றங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளார்
கடந்த சில நாட்களுக்கு முன்பே ஆவினில் விரைவில் தண்ணீர் விற்பனையும் ஆவின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை தொடர்ந்து 1 லிட்டர், 200மி.லி குடிநீர் பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஆவின்.
ஒப்பந்தம் அடிப்படையில் தண்ணீர் விற்க இவர்கள் முடிவு செய்துள்ளனர். எடுப்பவரிடம் தேவையான அளவிற்கு குடிநீர் ஆலைகள் மற்றும் இயந்திரங்கள் இருக்க வேண்டும் அதன்படி ஆரம்ப நாட்களில் இருந்து நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டம் போட்டுள்ளது ஆவின்.
மாற்றம்: தற்போது அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், ஆவின் பால் பாக்கெட்டுகளில் புதிய மாற்றங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளான ஆவின் 'கிரீன் மேஜிக்' பால் பாக்கெட்டை புதிய வடிவில் அறிமுகம் செய்துள்ளது ஆவின் நிர்வாகம்.
இந்த பாக்கெட்டுகளில் தோற்றம் மொத்தமாக மாற்றப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் மற்ற வண்ண பால் பாக்கெட்டுகளில் நிறங்களும் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த பேட்டியில், தற்போது ஆவினில் தரமற்ற பால் பாக்கெட்டுகள் உள்ளன.
இதனால் அதில் லீக் ஏற்படுகிறது. கடந்த ஆட்சியில் இதை மாற்றவே இல்லை. இதனால் கசியும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது பாக்கெட்டுகளை மாற்றி வருகிறோம். டாக்டர்கள் தொடங்கி பால்துறை வல்லுனர்கள் வரை பலரை ஆலோசித்து பால் பாக்கெட்டுகளில் தரத்தை மாற்ற முடிவு செய்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறி உள்ளார்.
அதிரடி அறிவிப்பு: முன்னதாக பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆவடி நாசர் சரியாக செயல்படவில்லை என்று அவரின் பதவி பறிக்கப்பட்டது. முக்கியமாக ஆவின் பால் தட்டுப்பாடு, ஆவின் துறையில் புதுமைகளை புகுத்த தவறியது உள்ளிட்ட பல புகார்கள் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மனோ தங்கராஜ் ஆவின் துறை அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்தே அவர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
அமைச்சரான பின் நந்தனத்திலுள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் NABARD, TANII, SBGF, DIDF போன்ற நிதி நிறுவனங்களுடன் ஆய்வுக் கூட்டத்தை அமைச்சர் நடத்தினார். இதில் நிதி & வள மேலாண்மை், தானியங்கி & உள்கட்டமைப்பு, நலத்திட்டங்கள் மற்றும் வணிக விரிவாக்கம் போன்ற அம்சங்கள் குறித்து மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆவினில் தற்போது 45 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் உள்ளதாகவும், இது அதிகரிக்கப்படும் என்றும் மனோ தங்கராஜ் தெரிவித்தார். கொள்முதல் மற்றும் செயலாக்கத்தை மேம்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதேபோல் ஆவினில் புதிய வகையான பால் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications