Good News சென்னைக்கு! பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ தடத்தில் இன்று 90 கி.மீ வேகத்தில் அதிரடி டெஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான தடத்தில் பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுகள் இன்று தொடங்குகிறது.. இந்த செய்தி சென்னை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

சென்னையில், மொத்தம் மூன்று வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26 கி.மீ. தொலைவு கொண்ட பாதையில் பணிகள் மிகத் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

Chennai Metro Poonamallee Vadapalani

இதில் முதற்கட்டமாக, பணிகள் முழுமையடைந்துள்ள வடபழனி - பூந்தமல்லி இடையேயான 16 கி.மீ. தூர தடத்தில் ரெயில்களை இயக்குவதற்கான இறுதிக்கட்ட சோதனைகள் இன்று முதல் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்று முதல் 3 நாள் ஆய்வு

ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான உயர் அதிகாரிகள் குழு, இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்த வழித்தடத்தில் விரிவான ஆய்வுகளை நடத்த உள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளை பொறுத்தே இப்பாதையில் பொதுமக்களுக்கான ரெயில் சேவை தொடங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். முதல் இரண்டு நாட்களில், மெட்ரோ ரெயிலின் பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளங்களின் உறுதித்தன்மை மற்றும் தரம், ரெயில் பெட்டிகளில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் அவசர கால பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து மிக நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட உள்ளது.


சோதனை ஓட்டம்

ஆய்வின் 3லது நாளான மிக முக்கியமான கட்டத்தில், மெட்ரோ ரெயிலை 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. அதிவேகத்தில் செல்லும் போது ரெயிலின் நிலைத்தன்மை மற்றும் சிக்னல் அமைப்புகளின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பது இதன் மூலம் கண்டறியப்படும்.

இந்த 16 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மொத்தம் 10 ரெயில் நிலையங்களிலும் தங்குதடையற்ற மின்சார விநியோகம் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால், சென்னையின் மேற்குப் பகுதி மக்கள் நகரின் மையப்பகுதியை மிக விரைவாக அடைய முடியும்.

வடபழனி- பூந்தமல்லி

ஏற்கனவே அரசு தரப்பில் இது குறித்து சொல்லும்போது, "சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் திட்டமிட்டபடி மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26 கி.மீ. பாதையில், வடபழனி - பூந்தமல்லி இடையேயான பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி அவர்கள் ஆய்வுகளை மேற்கொள்கிறார்.

பிரேக்கிங் சிஸ்டம் முதல் அதிவேக சோதனை ஓட்டம் வரை அனைத்தும் முறைப்படி ஆய்வு செய்யப்படும். மக்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில் இந்த தடத்தில் ரெயில் சேவை தொடங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

சென்னை மெட்ரோ

இந்த அறிவிப்பு மற்றும் பாதுகாப்பு ஆணையரின் நேரடி ஆய்வு, சென்னை மெட்ரோ பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தொழில்நுட்ப ரீதியாக 90 கி.மீ. வேகம் வரை சோதனை செய்யப்படுவது, எதிர்காலத்தில் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்பதைக் காட்டுகிறது. இந்த 3 நாள் ஆய்வின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், அதில் சொல்லப்படும் பரிந்துரைகளை அமல்படுத்தி, அடுத்த சில வாரங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த வழித்தடம் முறைப்படி திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+