உடனே சரி பண்ணுங்க.. சாட்டையை சுழற்றிய ஜெ.ராதாகிருஷ்ணன்.. பெரு மூச்சு விட்ட சென்னை மக்கள்.. அப்பாடி
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் முக்கியமான சில உத்தரவுகளை மாநகராட்சி நிர்வாகிகளுக்கு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி: சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டது பெரிய அளவில் கவனம்பெற்றுள்ளத. ராதாகிருஷ்னன் இந்த பொறுப்பிற்கு வந்ததில் இருந்தே சிங்கார சென்னை திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக புதிய டீம் ஒன்றையும் களமிறக்கி உள்ளார். அதோடு இதுவரை முடிக்கப்பட்ட பணிகள், முடிக்கப்படாத பணிகள், அறிவிக்கப்பட்ட பணிகளை லிஸ்ட் எடுத்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளார்.
மேலும் சென்னையில் நடக்கும் ஒவ்வொரு பணிகள் குறித்தும் தனக்கு அப்டேட் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவித்து உள்ளார். இந்த நிலையில் ராதாகிருஷ்னன் பின்வரும் முக்கியமான உத்தரவுகளை மாநகராட்சி நிர்வாகிகளுக்கு பிறப்பித்துள்ளார். அதில், சென்னையில் எங்கெல்லாம் சாலை பணிகள் நடக்கிறதோ அங்கெல்லாம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். உட்புற சாலை பணிகளை முடிக்க வேண்டும்.
முக்கியமாக குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை விரைந்து முடிக்க வேண்டும். இதில் தாமதம் இருக்க கூடாது. இது போன்ற சாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை செய்ய வேண்டும். சாலைகளை முறையாக மில்லிங் செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை - மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் வரும் சாலைகளை அவர்களுடன் இணைந்து பராமரிக்க வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிங்கார சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக சென்னையில் இருக்கும் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் பல புதிய அலங்கார அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளும் சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். அதேபோல் துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது; 20 கிமீ தொலைவு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமையவுள்ளது. மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்பது போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications