தாம்பரம் துள்ளுது.. தித்திப்பு நியூஸ் வந்தது.. மங்களூருக்கு ஸ்பெஷல் ரயில் வந்தாச்சு.. குஷியில் சென்னை
சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு, தாம்பரத்திலிருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எப்போது தெரியுமா?
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.. இதனால், பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்லவும், சொந்த ஊர்களுக்கு செல்லவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் வெயில் அதிகரித்து வருவதால், கோடைவாசஸ்தலங்களை நோக்கியும் பொதுமக்கள் குடும்பத்துடன் செல்ல துவங்கி உள்ளனர்.

கோடை விடுமுறை: இதையடுத்து பொதுமக்களின் வசதிக்காகவே, போக்குவரத்து வசதிகளும், சிறப்பு அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.. அந்தவகையில், தெற்கு ரயில்வே சார்பில், பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
4 நாட்களுக்கு முன்புகூட, விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்திருந்தது.. அதன்படி, திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06070) ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும் என அறிவிக்கப்பட்டது.
தென்னக ரயில்வே: இந்நிலையில், தாம்பரம் - மங்களூரு இடையே ஏப்ரல் 19ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே மீண்டும் ஒரு குட்நியூஸ் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
"தாம்பரத்திலிருந்து மங்களூா் சென்ட்ரலுக்கு ஏப்ரல் 19 முதல் மே 31 வரை வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண் 06049) இயக்கப்படும். தாம்பரத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு மங்களூா் சென்றடையும்.
மறுமார்க்கம்: மறுமாா்க்கமாக மங்களூரில் ஏப்.21 முதல் ஜூன் 2 வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண் 06050) இயக்கப்படும். அங்கிருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 5.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு வழியாக இயக்கப்படும்.
அறிவிப்பு: கேரள மாநிலம் எா்ணாகுளம்-தில்லி (ஹஸ்ரத் நிஜாமுதின்) இடையே ஏப்.19 முதல் கோடைகால சிறப்பு ரயில் (06071/06072) இயக்கப்படும் என கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் ஹஸ்ரத் நிஜாமுதின் ரயில் நிலையம் செல்வதற்கு பதிலாக புதுதில்லி ரயில் நிலையம் வரை இயக்கப்படவுள்ளது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications