வீட்டுவசதி வாரியம் தந்த ஆன்லைன் சர்ப்ரைஸ்.. வீடு மனை வாங்குவோருக்கு TNHB குட் நியூஸ்! மக்கள் நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடு, மனை வாங்கும்போது சில நடைமுறை சிக்கல்கள் எழுந்தபடியே இருக்கிறது.. குறிப்பாக சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களை அணுகினால், உரிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்ற புகார்கள் வெடித்து வந்தன.. இப்படிப்பட்ட சூழலில்தான், பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், வீட்டுவசதி வாரிய வீடு வாங்க ஆன்லைன் வசதி அறிமுகமாக உள்ளது.. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

வீடு அல்லது மனை வாங்குவோர், முதலில் அந்த இடத்தை பார்த்து முடிவு செய்வது வழக்கம்.. பிறகு அதை விற்கும் நபர் தான் உண்மையிலேயே உரிமையாளர் தானா என்பதையும் பார்க்க வேண்டும். அவர் வைத்துள்ள பழைய பத்திரங்களையும் பார்க்க வேண்டும்.

TNHB Home Buying Tamil Nadu Housing Board

அந்த இடம் அவருடையது என்று அரசு பதிவுகளில் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக, சப்-ரெஜிஸ்டர் ஆபீஸில் இருந்து ஒரு சான்று எடுக்கப்படுகிறது. அதற்குதான் வில்லங்க சான்றிதழ் என்பர்.. அந்த இடத்துக்கு கடன், வழக்கு போன்ற பிரச்சனைகள் உள்ளதா என்பது இந்த சான்றிதழிலேயே தெரிய வரும்.

வருவாய்த்துறை, பதிவுத்துறை

மனை வாங்கினால், அந்த மனை அரசு அனுமதி பெற்ற லேஅவுட்டில்தானா என்று பார்க்க வேண்டும். அனுமதி இல்லாத இடம் என்றால், பிறகு பதிவு செய்ய முடியாமல் போகும். வீடு அல்லது ஃப்ளாட் வாங்கினால், கட்ட அனுமதி கிடைத்ததா, வீடு முடிந்து அரசு அனுமதி வந்ததா என்பதையும் பார்க்கிறார்கள்.

புதிய அபார்ட்மென்ட் என்றால், அரசு பதிவு (RERA) இருக்கிறதா என்பதும் இப்போது வழக்கமாக பார்க்கப்படுகிறது. இதெல்லாம் சரியென்று கன்பார்ம் செய்தபிறகுதான் முன்பதிவு செய்யப்படுகிறது..

காகித ஒப்பந்தம் - பத்திரப்பதிவு

முன்பதிவு என்பது ஒரு காகித ஒப்பந்தமாகும்.. அதில் இந்த இடத்தின் விவரம், விலை எவ்வளவு, இப்போது எவ்வளவு பணம் கொடுக்கிறோம், மீதி பணத்தை எப்போது கொடுக்கணும், பத்திரம் எப்போது எழுதணும் என்றெல்லாம் எழுதப்படும். வாய்மொழியாக பேசினால் எதையுமே, யாருமே நம்ப மாட்டார்கள்.. அதுக்குதான் இதுபோன்ற எழுத்தில் ஆவணமாக எழுதி கொள்வார்கள். இது பாதுகாப்பானதும்கூட..

அட்வான்ஸ் கொடுக்கும்போது, இப்போது ரொக்கமாக அதிக பணம் தருவது தவிர்க்கப்படுகிறது. வங்கி மூலமாக பணம் கொடுத்தால் தான் பாதுகாப்பு என்பதால், பேங்க்கிலேயே தரப்படுகிறது.. பணம் கொடுத்ததற்கு ஒரு ரசீதையும் மறக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும்.

முன்பதிவு முடிந்த பிறகு, குறிப்பிட்ட நாளில் ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு போய். பத்திரம் பதிவு செய்துவிட வேண்டும்.. போட்டோ, கைரேகை . பத்திரம் பதிவு என மொத்தமும் முடிந்தபிறகுதான், அந்த வீடு அல்லது மனை சட்டப்படி நமக்கு உரிமையானதாக மாறும்.. இதுதான் தற்போதுள்ள நடைமுறையாக இருந்து வருகிறது.

வீட்டுவசதி வாரிய வீடு வாங்க ஆன்லைன் வசதி

இந்நிலையில், வீடு, மனை வாங்க விரும்புவோர், அதற்கான முன்பதிவு பணிகளை மேற்கொள்ள ஆன்லைன் வசதி அறிமுகமாகி உள்ளது..

ஆம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்பு திட்டங்களில், வீடு மற்றும் மனை வாங்க விரும்பும் பொதுமக்களுக்காக புதிய ஆன்லைன் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாரியத்தின் திட்டங்களில் விற்பனைக்கு உள்ள வீடுகள் மற்றும் மனைகள் குறித்த முழு விவரங்களை பொதுமக்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட வெப்சைட்டுக்கே சென்று தெரிந்து கொள்ள முடியும்.

இதற்கு முன்பு, விற்பனைக்கு தயாராக உள்ள வீடு, மனை விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டாலும், சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களை நேரில் அணுகும் போது உரிய தகவல் கிடைப்பதில்லை என நிறைய புகார்கள் வந்தவண்ணம் இருந்தன..

புதிய ஆன்லைன் வசதி

அதனால்தான், இதுபோன்ற புகார்களை களைவதற்காகவே, பொதுமக்கள் எளிதாக தகவல் அறிந்து, தங்களுக்கு தேவையான வீடு அல்லது மனையை தேர்வு செய்ய புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

வீட்டுவசதி வாரிய திட்டங்களில் உள்ள வீடு, மனை விற்பனைக்காக பிரத்யேகமாக செயல்படும் இந்த வெப்சைட் வடிவமைக்கப்பட்டுள்ளது.. அதாவது சாதாரண மக்களுக்கும் எளிதாக பயன்படுத்த முடியும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளதாம்.. திட்ட விவரங்கள், இடம், விலை உள்ளிட்ட தகவல்களை இந்த வெப்சைட்டிலேயே பார்த்து கொள்ளலாம்.

வெளிப்படைத்தன்மை

https://propertysales.tnhb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பொதுமக்கள் பதிவு செய்தால் போதும். பதிவு செய்தவர்களை தொடர்பு கொண்டு, வீட்டுவசதி வாரியத்தின் விற்பனை பிரிவு அதிகாரிகள், வீடு அல்லது மனை தேர்வு செய்ய தேவையான முழு விவரங்களையும் வழங்குவார்கள்.

இந்த புதிய ஆன்லைன் வசதி மூலம், அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைவதை தவிர்த்து, வெளிப்படையான மற்றும் எளிய முறையில் வீடு, மனை வாங்கும் நடைமுறை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+