Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்து வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்: வரி ரசீது பயன்கள் மற்றும் முழு விலக்கு யாருக்கு? இதோ விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்து வரி என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அமைந்துள்ள நிலம் மற்றும் கட்டிடங்களின் உரிமையாளர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதாவது மாநகராட்சி, நகராட்சி அல்லது பேரூராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய ஒரு கட்டாயக் கட்டணமாகும். இந்த சொத்து வரி செலுத்துவதன் அவசியம் என்ன? சொத்து வரி ரசீது என்றால் என்ன? சொத்து வரியை கொண்டு மாநகராட்சி செய்யக்கூடிய பணிகள் என்னென்ன? அவைகள் பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

ஒரு நாட்டின் அல்லது நகரத்தின் வளர்ச்சியை தீர்மானிப்பதில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தப்படும் சொத்து வரி மிக முக்கிய பங்கு வகிக்கிறது...

Property Tax Exemption Tax Receipt Tax Waiver

குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் காலி மனைகள் என அனைத்து வகையான அசையா சொத்துகளுக்கும் இந்த வரி விதிக்கப்படுகிறது. சொத்தின் பரப்பளவு, அமைந்துள்ள இடம், பயன்பாட்டு வகை அதாவது அப்பார்ட்மென்ட் அல்லது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் கட்டுமான வகை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வரி கணக்கிடப்படுகிறது.

வருவாய் ஆதாரம்

இது பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் சுகாதார பணிகளையும் தடையின்றி வழங்குவதற்கான முதன்மையான நிதி ஆதாரமாக திகழ்கிறது. நாம் வசிக்கும் பகுதியின் தரம் உயரவும், உள்கட்டமைப்பு மேம்படவும் உரிய நேரத்தில் வரி செலுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

சொந்தமாக வீடு அல்லது நிலம் வைத்திருப்பவர்கள் அந்தந்த மாநகராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி என்பது வெறுமனே ஒரு கட்டணம் மட்டுமல்லாமல், ஒரு நகரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக சொத்து வரி திகழ்கிறது.. மாநகராட்சிகளின் வருவாய் ஆதாரங்களில் முதன்மையான இடத்தை பிடிப்பது இந்த சொத்து வரிதான்.

சொத்து வரியின் அவசியம்

இந்த வருவாயை கொண்டுதான் ஒரு மாநகராட்சி தனது எல்லைக்குட்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை தங்குதடையின்றி வழங்க முடிகிறது. குறிப்பாக, பொது சுகாதார பணிகள், தெரு விளக்குகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், திடக்கழிவு மேலாண்மை எனப்படும் குப்பைகளை அகற்றுதல் போன்ற அத்தியாவசிய பணிகள் இந்த வரிப்பணத்தின் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன...

மேலும், சாலைகளை சீரமைத்தல், மழைநீர் வடிகால்களை பராமரித்தல் மற்றும் பொதுமக்களின் மனமகிழ்விற்கான பூங்காக்களை உருவாக்குதல் போன்ற பணிகளுக்கும் இந்த நிதி ஆதாரமாக விளங்குகிறது.

அதனால்தான், மாநகராட்சி நிர்வாகங்கள் உரிய காலத்திற்குள் வரியை செலுத்துமாறு பொதுமக்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. வரியை சுமையாக கருதாமல், நாம் வசிக்கும் பகுதியின் தரம் உயரவும், நமது இருப்பிடத்தின் மதிப்பு பெருகவும் நாம் செய்யும் ஒரு முதலீடாகவே இதனை பார்க்க வேண்டும்.

சொத்து வரி ரசீது: முக்கியத்துவம் - பயன்கள்

வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், பல மாநகராட்சிகள் சிறப்பான சலுகைகளையும் வழங்கி வருகின்றன. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் (நிதியாண்டின் தொடக்கத்தில்) முழு வரியையும் செலுத்தும் நேர்மையான வரிதாரர்களுக்கு 5 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

அதே வேளையில், காலக்கெடு முடிந்தும் வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையும் உள்ளது. எனவே, அபராதத்தை தவிர்த்து சலுகையை பெறுவது ஒவ்வொரு குடிமகனுக்கும் லாபகரமானதாகும்.

சொத்து வரி செலுத்தியதற்கான அதிகாரப்பூர்வமான சான்றே சொத்து வரி ரசீது ஆகும். இதில் வரி செலுத்துபவரின் பெயர், சொத்து அடையாள எண் வரி விதிக்கப்பட்ட காலம், செலுத்தப்பட்ட தொகை மற்றும் தேதி போன்ற முக்கிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். ஒரு சொத்தின் சட்டப்பூர்வமான உரிமையை நிரூபிக்கவும், மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்ற இதர அரசு சேவைகளைப் பெறவும் இந்த ரசீது மிக அவசியமான ஆவணமாகும்.

ஆன்லைன் வசதிகள்

சென்னை போன்ற பெருநகரங்களில் மாநகராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாக சொத்து வரி திகழ்கிறது... அன்றைய நிலைமை போல் இன்றில்லை... இன்று வரி செலுத்துவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர்கள் மாநகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

வெப்சைட் மூலமாகவும், செல்போன் ஆப் வழியாகவும் மிக எளிதாக ஒரு சில நிமிடங்களில் வரியை செலுத்திவிட்டு அதற்கான ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். \நெட் பேங்கிங், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் வீட்டிலிருந்தே வரி செலுத்த முடியும். இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கிறது.

இத்தகைய நவீன வசதிகளை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்வது நகரத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் வலுசேர்க்கும்... ஒரு நகரத்தின் தூய்மையும் வளர்ச்சியும் அந்த நகர மக்கள் செலுத்தும் வரியிலும், அதை நிர்வாகம் கையாளும் விதத்திலுமே அடங்கியுள்ளது.

யார் யாருக்கு வரி விலக்கு

போரில் காயமடைந்தவர்கள், வீரதீர செயலுக்கான விருது பெற்றவர்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு சொத்து வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முன்னாள் ராணுவத்தினரின் விதவைகளுக்கு இந்த சலுகை பொருந்தும். ஆனால் சொந்த குடியிருப்பு வீடுகளுக்கு மட்டுமே இந்த வரி விலக்கு கிடைக்கும்.

இந்த வரி விலக்கை பெற விரும்பும் முன்னாள் ராணுவத்தினர், தங்களது அடையாள அட்டை, பணி சான்றிதழ், சொத்து விவரங்கள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு?

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இந்த ஆண்டிற்கான 6 சதவீத சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு நடவடிக்கையானது தேர்தலில் அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தற்போது இதனை அமல்படுத்த வேண்டாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு தற்காலிக நிம்மதியை அளித்தாலும், இது ஒரு நிரந்தர சலுகை அல்ல என்று கூறப்படுகிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, இந்த சொத்து வரி உயர்வு மீண்டும் அமலுக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+