10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குட்நியூஸ்.. ஆசிரியர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கை
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாட வினாத்தாள்களில் சில வினாக்கள் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆங்கிலம், அறிவியல் பாடத்தில் முரண்பாடான வினாக்களுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சமூக அறிவியல் தேர்வில் குறிப்பிட்ட வினாவுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்த நிலையில் இந்த கோரிக்கையை ஆசிரியர்கள் வைத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த ஏப்ரல் 15ம் தேதி நிறைவு பெற்றது. அதில் சமூக அறிவியல் பாடத் தோ்வில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 4-ஆவது கேள்வியாக, கூற்று: ஜோதிபா புலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தாா். காரணம்: ஜோதிபா புலே குழந்தைத் திருமணத்தை எதிா்த்தாா். விதவை மறுமணத்தை ஆதரித்தாா் என கூறப்பட்டிருந்து.

இந்தக் கேள்வியில் இரண்டு வாக்கியங்களுமே முரணாக இருந்ததாகத் தெரிவித்த ஆசிரியா்கள் இதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனா். இதற்கிடையே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் தொடங்கிவிட்டது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தோ்வில் 4-ஆவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே 1 மதிப்பெண் போனஸாக வழங்கப்படும் என்று தோ்வுத் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், அரசு தேர்வுகள் இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறுகையில், "2024-25-ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாட வினாத்தாள்களில் சில வினாக்கள் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாடத் தேர்வில், வினா எண் 7-ல் 'தமிழில் ஒரு கிலோ கிராம் எடை என்பதற்கு சமமாகும்' என வழங்கப்பட்டுள்ளது. அதுவே, ஆங்கிலத்தில் 'போர்ஸ்' அதாவது விசை என கூறப்பட்டுள்ளது.
தமிழில் எடை என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதேபோல், கேள்வி எண் 22-ல், தமிழ் வினாவில் மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு கொடுக்கப்படவில்லை. மேலும், ஆங்கில பாடத் தேர்வில், கேள்வி எண் 14, 18, 23, 44 ஆகியவையும் முரண்பாடாக அமைந்துள்ளது. எனவே இந்த கேள்விகளை எழுத முயற்சித்திருந்தாலே மதிப்பெண் வழங்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications