தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! உங்கள் பிள்ளைகளின் கல்வி செலவை பற்றி கவலை வேண்டாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயில்வதற்கான வட்டியில்லா முன்பணம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை உயர்த்தி வழங்குவதாக அரசாணை வெளியிட்டுள்ளது அரசு.

அதன் படி பொறியியல் உள்ளிட்ட தொழில்முறை கல்விக்கு ரூ.50,000 வரையும், கலை அறிவியல் கல்லுரிக்கு ரூ.25,000 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு;

Good news for Tamil Nadu government employees! Dont worry about your childrens education expenses!

கல்லூரி /பல் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஈடுகட்ட உதவும் வகையில் கல்வி முன்பணம் என்ற வட்டியில்லா முன்பணம் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. அதில் அரசு ஊழியர்களின் ஒரு மாத அடிப்படை சம்பளம் அல்லது கல்வி முன்பணம் இதில் எது குறைவோ என்ற வரம்பின் அடிப்படையில் பெறலாம் என அரசாணை (நிலை) எண்.821, நிதி(சம்பளங்கள்) துறை, நாள்.13.06.1979-ல் ஆணையிடப்பட்டது.

மேற்கண்ட அரசாணை வெளியிடப்பட்டு முப்பதாண்டுகள் கடந்த நிலையில், அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணத் தொகையானது கீழ்கண்ட நிபந்தனைகளுடன் தற்போது இவ்வரசால் உயர்த்தி ஆணையிடப்படுகிறது.

இந்த உயர்த்தப்பட்ட கல்வி முன்பணத் தொகை 2023-2024 கல்வி ஆண்டிலிருந்து வழங்கப்படும்.

I.தொகுதி C மற்றும் D ஊழியர்களுக்கு, ஒரு மாத அடிப்படை ஊதியத்திற்கு சமமான தொகை அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை அனுமதிக்கப்படும்.

II. தொகுதி A மற்றும் B அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியத்தில் 50% அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை அனுமதிக்கப்படும்.

Good news for Tamil Nadu government employees! Dont worry about your childrens education expenses!

அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில் முந்தைய வரம்பு தற்போது உயர்த்தப்பட்ட வரம்பு

*தொழில் முறை கல்வி முந்தைய வரம்பு ரூ.2,500, தற்போது உயர்த்தப்பட்ட வரம்பு ரூ.50,000

*கலை மற்றும் அறிவியல் கல்லூரி முந்தைய வரம்பு ரூ.2,000, தற்போது உயர்த்தப்பட்ட வரம்பு ரூ.25,000

* பல் தொழில்நுட்ப கல்லூரி முந்தைய வரம்பு ரூ.1,000 தற்போது உயர்த்தப்பட்ட வரம்பு ரூ.25,000

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+