இனி ரொம்ப ரொம்ப ஈஸி.. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்.. செம
சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஓய்வூதியர்கள் வாழ்வு சான்றிதழை அளிக்கும் முறையில் முக்கியமான மாற்றங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டமும் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. உதாரணமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது.
இன்னொரு பக்கம் குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளது.

அதே சமயம் இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக பெட்ரோல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை
அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இதை செயல்படுத்த முடியாது என்று முன்பு நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில்தான் புது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தொழிற் சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன
பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி தி இந்து ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.
அமைச்சர் பிடிஆர் போல பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர மாட்டோம் என்று மறுக்காமல் தங்கம் தென்னரசு அளித்த பதிலால், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாற்றம்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அரசு ஓய்வூதியர்கள் வாழ்வு சான்றிதழை அளிக்கும் முறையில் முக்கியமான மாற்றங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு உள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற வருடா வருடம் தாங்கள் உயிருடன் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
இதற்கு முன்பெல்லாம் வருடம் தோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்படும். ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வை உறுதி செய்வதற்கான வாழ்வு சான்று அளிக்க இந்த காலத்தில் மட்டும் நேரம் அளிக்கப்படும்.
இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வருடத்தில் இருந்து ஓய்வூதியர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்தில் எல்லா வருடமும் சான்றிதழை அளிக்க முடியும் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும். எளிதாக பணிகளை முடிக்க முடியும்.
ஓய்வூதியர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப பின்வரும் ஏதேனும் ஒருமுறையை பின்பற்றி இவ்வாண்டிற்கான நேர்காணல் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1) ஜீவன் பிரமான் இணைய தள மின்னணு வாழ்நாள் சான்றிதழ் தமிழ் நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு ஜீவன் பிரமான் இணைய தளம் மூலமாக ஓய்வூதியர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு சேவை முறையை பின்பற்றி மின்னனணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அ) இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70/- கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
ஆ) அரசு இ-சேவா மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம் .

இ) ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி (Biometric Device) பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
ஈ) கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இல்லாமல் ஜீவன் பிரமான் முகம் பதிவு செயலி பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம் மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் அளிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்
1) ஆதார் எண்
2) P.P.O.No.
3) வங்கிகணக்கு எண்
4) ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications