குட் நியூஸ்.. தமிழகத்தில் இனி ஒரு குடிசை கூட இருக்காது.. 10 லட்சம் புதிய வீடுகள்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழக கிராமப்புறங்களின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மிக முக்கியமான புதிய வாக்குறுதியை அறிவித்துள்ளார்.. இந்த செய்திதான் வாடகை வீட்டுதாரர்களை மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தி வருகிறது. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.!!
தமிழகத்தின் குக்கிராமங்களில் ஓலை வீடுகளிலும் பாதுகாப்பற்ற குடிசைகளிலும் வசித்து வரும் ஏராளமான விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த உன்னதத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஏழை எளிய மக்களின் நீண்ட காலக் கனவான சொந்த கான்கிரீட் வீடு என்பதை நனவாக்கும் இந்தத் திட்டம் ஊரகப் பகுதிகளில் ஒரு மிகப்பெரிய சமூகப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

கலைஞர் கனவு இல்லம் திட்டம்
கடந்த மாதம் இந்தத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஒரு லட்சம் புதிய வீடுகளைக் கட்டுவதற்காக 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.. ஏற்கனவே மாநிலம் முழுவதும் சுமார் இரண்டு லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் பல்வேறு நிலைகளில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கூடுதல் அறிவிப்பு கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது..
இந்நிலையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வெளியிட்டார்.. அதில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்ற பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது பலரது கவனம் பெற்று வருகிறது.
10 லட்சம் வீடுகள்
2030ம் ஆண்டுக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 5 லட்சம் வீடுகள் மற்றும் நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகள் என மொத்தம் 7 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்..
இந்த சூப்பரான திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் சில குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது.. குறிப்பாக விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவராகவும் கிராமப்புறங்களில் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.. பாதுகாப்பான குடியிருப்பு இல்லாதவர்கள் மற்றும் குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது..
அதேசமயம், ஏற்கனவே கான்கிரீட் வீடுகள் வைத்திருப்பவர்கள் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.. இது உண்மையான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் வகுக்கப்பட்ட விதியாகும்.
ஸ்டாலின் குட்நியூஸ்
அதுமட்டுமல்ல, நிதியுதவியைப் பொறுத்தவரை ஒரு வீடு கட்டுவதற்கு அரசு தரப்பிலிருந்து 3,50,000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.. இந்தப் பெருந்தொகையானது கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து தவணைகளாக நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படுகிறது.. இதன் மூலம் புரோக்கர்களின் தலையீடு இல்லாமல் நிதி முழுமையாகப் பயனாளிகளுக்கு சென்றடைகிறது..
மேலும் கட்டுமானத்திற்குத் தேவையான கூடுதல் நிதி தேவைப்படும் பட்சத்தில் வங்கிகள் மூலம் 1,50,000 ரூபாய் வரை கடன் வசதி பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது..
பயனாளிகளின் சுமையை குறைக்க தமிழக அரசின் டான்செம் நிறுவனம் மூலம் குறைந்த விலையில் சிமெண்ட் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் தரமான இரும்புக் கம்பிகள் வழங்கப்படுவதும் இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். கட்டுமானத்தின் தரம் மற்றும் வடிவமைப்பில் அரசு மிகுந்த கவனம் செலுத்துகிறது.
பயனாளிகளுக்கு சர்ப்ரைஸ்
ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில் சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் அமைய வேண்டும்.. இதில் 300 சதுர அடி பரப்பளவு கட்டாயம் ஆர்சிசி கூரையுடன் இருக்க வேண்டும் என்பது விதிமுறை.. பயனாளிகள் செங்கல் அல்லது நவீன ஏஏசி பிளாக் கற்களைப் பயன்படுத்தித் தங்களுக்குப் பிடித்தமான முறையில் மீதமுள்ள பகுதியை அமைத்துக்கொள்ளலாம்.
|பயனாளிகள் தேர்வு முறையும் மிகவும் வெளிப்படையானது.. ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையிலான குழுவினர் விண்ணப்பங்களை நேரில் ஆய்வு செய்து கிராம சபையின் ஒப்புதலைப் பெற்ற பிறகே இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.. தகுதியுள்ள பொதுமக்கள் தங்கள் பகுதி ஊராட்சி அலுவலகத்தில் பட்டா சிட்டா ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழ் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பித்து தங்கள் சொந்த வீட்டுப் கனவை நனவாக்கிக் கொள்ளலாம்..
திமுக தந்த பிராமிஸ்
இந்த 10 லட்சம் புதிய வீடுகள் கட்டும் வாக்குறுதி நிறைவேறும் பட்சத்தில், தமிழகத்தில் வீடற்ற ஏழைகளே இல்லை என்ற நிலை உருவாகும்.. இது ஏழை மக்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதுடன் அவர்களின் பொருளாதாரத் தரத்தையும் உயர்த்தும்.. பாதுகாப்பான கான்கிரீட் வீடுகள் கிடைப்பதால் மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் கிராமப்புற மக்கள் அச்சமின்றி வாழ முடியும்.
அதுவும் நகர்ப்புற ஏழைகளுக்கும் 2 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களின் வாழ்க்கை தரம் பெருமளவு முன்னேற்றம் காணும்.. அரசின் இந்த மெகா அறிவிப்பு தமிழகத்தின் உள்கட்டமைப்பில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!!
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications