ரயில் பயணிகளுக்கு பெரிய நிம்மதி.. சென்னையில் இன்று முதல் 3 புதிய மின்சார ரயில்கள்.. ரூட், டைமிங் இதோ
சென்னை: சென்னையில் மூன்று வழித்தடங்களில் இன்று புதிதாக ரயில் சேவைகள் தொடங்கப்படுகிறது. ஆவடி - சென்னை சென்டிரல், சென்டிரல் - திருவள்ளூருர் மற்றும் திருவள்ளூர் - சென்டிரல் என 3 வழித்தடங்களில் புதிதாக ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. இதனால் சென்னை புறநகர் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் புறநகர் ரயில்கள் போக்குவரத்து இன்றியமையாததாக உள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு ரூட், சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை கடற்கரை - திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் மற்றும் சென்னை கடற்கரை - பட்டாபிராம் என மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மின்சார ரயில் சேவை: இதில் மிகவும் முக்கிய வழித்தடம் எதுவென்றால் சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடம் தான். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த மின்சார ரயில்களில் பயணம் செய்கிறார்கள். சராசரியாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இந்த ரூட்டில் இயக்கப்படுவது வழக்கம். ஒரு சில நிமிடங்களில் ரயில் தாமதம் ஆனால் கூட ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதிவிடும்.
3 வழித்தடங்களில்: ரயில்கள் சில மணி நேரம் இயங்காவிட்டால் மொத்த சென்னையே ஸ்தம்பித்துவிடும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடும். சென்னை மின்சார ரயில்களை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 600க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 8 லட்சம் பயணிகள் வரை பயணிக்கின்றனர். ரயில்வேயும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது.
புதிய ரயில் சேவைகளை தொடங்குவது, ரயில் சேவைகளை நீட்டிப்பது, பராமரிப்பு பணிகள் என ரயில்வே பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் 3 வழித்தடங்களில் இன்று முதல் புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக சென்னை கோட்ட தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் 2 ரயில் சேவைகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதிய மின்சார ரயில்கள்: இன்று முதல் 3 புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.
* ஆவடி முதல் சென்னை சென்டிரலுக்கு ஒரு மின்சார ரயில் காலை 9.50 மணிக்கு இயக்கப்படுகிறது.
* சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு காலை 10.40 மணிக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
* திருவள்ளூரில் இருந்து சென்டிரலுக்கு மாலை 3.50 மணிக்கு ஒரு மின்சார ரயில் என மொத்தம் 3 புதிய மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைகள்: இதேபோன்று சில மின்சார ரயில்கள் நீட்டிக்கபட்டுள்ளது. அதன்படி,
* சென்டிரல் - கும்மிடிப்பூண்டிக்கு நண்பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று முதல் சூளூர்பேட்டை வரை நீட்டிக்கப்படுகிறது.
* கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications