"சிக்ஸர்".. எடப்பாடிய பேசவே விடலயே.. டாண் டாண்ணு எகிறியடிக்கும் திமுக.. தமிழக மக்களுக்கு குஷி செய்தி
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வழங்கப்படும் என்று அமைச்சர் காந்தி உறுதி தந்துள்ளார்
சென்னை: திமுக அரசு மீது ஏதாவது ஒரு புகாரை முன்வைக்க எடப்பாடி பழனிசாமி முயன்று வரும் நிலையில், அந்த புகார்களையெல்லாம் நொறுக்கி தள்ளிவிட்டு, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறது திமுக அரசு என்கிறார்கள்.. இப்போதும் அப்படித்தான் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வரும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையுடன் ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை வழங்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனர்.. இதனால், விவசாயிகளும் ஏமாற்றமடைந்தனர்.

ஹேப்பி தகவல்
எப்படியும் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் கரும்பு, வெல்லம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. எனவே, இந்த ஆண்டு கரும்பு, வெல்லமும் தமிழக அரசு அதிகளவில் கொள்முதல் செய்யும் என்றும் நம்பப்பட்டு வந்தது.. ஆனால், அப்படி எதுவுமே இல்லாமல், இந்த வருட பொங்கல் அறிவிப்பு, தங்களுக்கு ஏமாற்றத்தை தந்துவிட்டதாக கரும்பு விவசாயிகள் கருதியதாக கூறப்பட்டது.. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் போராட்டமும் நடத்தினர்.

ஸ்வீட் நியூஸ்
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு உடனடியாக வெளியானது.. இதற்கு விவசாயிகளும் தமிழக அரசுக்கு தங்கள் நன்றியை தெரிவித்து கொண்டார்கள். முன்னதாக, பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழுக் கரும்பை வழங்கக் கோரி எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தார். அவ்வாறு கரும்பு வழங்காததை கண்டித்து, அதிமுக சார்பில் வரும் ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.. ஆனால், தமிழக அரசு, அந்த போராட்டத்துக்கு முன்னதாகவே கரும்பு அறிவிப்பினை வெளியிட்டது..

இனிக்கும் கரும்பு
இந்த அறிவிப்பை பார்த்ததுமே எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், அதிமுக போராட்டம் என்று அறிவித்த சில மணி நேரங்களிலேயே பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.. எனவே, 2ம் தேதி அதிமுக சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது என தமிழக அரசு எடுத்த முடிவு அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஆனால், இதற்கு திமுக தரப்பு பதிலடி தந்ததையடுத்து, கரும்பு விவகாரம் முடிவுக்கு வந்தது.

நூல் சேலை
இதற்கு பிறகு கரும்பை விட்டுவிட்டு, பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இலவச வேட்டி சேலைகள் நெய்வதற்கு தரமற்ற நூல்களை அரசு வழங்கியுள்ளதாகவும், வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.. இந்த அறிக்கைக்கும் திமுக அரசு பதிலடி தந்துள்ளது.. அமைச்சர் காந்தி இதை பற்றி கூறும்போது, "இலவச வேட்டி சேலை வழங்குவது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதியே முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தியிருந்தார்.

ஹோப் ஸ்டாலின்
அதில் 1 கோடியே 79 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்தாண்டைப்போலவே இந்த முறையும் பொங்கல் திருநாளில் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.. இலவச வேட்டி சேலைகளுக்காக ரூபாய் 487.92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் இடைச்செருகலாக வந்த எடப்பாடி பழனிசாமி மனம்போன போக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.. இனிமேலாவது பத்திரிகைகள், ஊடகங்களை பார்த்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், குழப்பமான அறிக்கைகளை அவர் வெளியிட்டு மக்களை குழப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications